படித்ததில் ரசித்தவை

படித்ததில் ரசித்தவை.....


2.  The Women in your life
to download click the following link... (913 KB)
http://www.opendrive.com/files/18546842_Iqenk_1fbc/To%20all%20the%20guys%20who%20read%20this.doc

2. காதலித்து பார்,

உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும்,

உலகம் அர்த்தப்படும்

இராத்திரியின் நீளம் விளங்கும்,

உனக்கும் கவிதை வரும்,

கையெழுத்து அழகாகும்,

தபால்காரன் தெய்வம் ஆவான்,

உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்,

கண்ணிரண்டும் ஒலி கொள்ளும்,

காதலித்து பார்...


தலையனையை நனைப்பாய்

மூன்று முறை பல் துலக்குவாய்

காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷம் என்பாய்

வந்துவிட்டால் வருஷங்க்ள் நிமிஷங்கள் என்பாய்

காக்கை கூட உன்னை கவனிக்காது ஆனால்

இந்த உலகம் உன்னையே கவனிப்பதாய் உணர்வாய்

வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா

உருண்டை ஒன்று உருள காண்பாய்

இந்த வானம், இந்த அந்தி, இந்த பூமி, இந்த பூக்கள் எல்லாம்

காதலை கௌரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்

காதலித்து பார்...


இருதயம் அடிக்கடி இடம் மாறி துடிக்கும்

நிசத்த அலைவரிசைகளில் உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும்

உன் நரம்பே நாண் ஏற்றி,

உனக்குள்ளே அம்பு விடும்

காதலின் திரைச்சீலையை காமம் கிழிக்கும்

ஆர்மோன்கள் நைல் நதியாய் பெருக்கெடுக்கும்

உதடுகள் மட்டும் சகாராவாகும்

தாகங்கள் சமுத்திரமாகும்

பிறகு கண்ணீர் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்

காதலித்து பார்...


பூக்களில் மோதி மோதி உடைந்து போக உன்னால் முடியுமா

அகிம்சையில் இம்சையை அடைந்ததுண்டா?

அழுகின்ற சுகம் அறிந்ததுண்டா?

உன்னையே உனக்குள் புதைக்க தெரியுமா?

சபையில் தனிமையாகவும், தனிமையை சபையாக்கவும்

உன்னாள் உன்னுமா?

அத்வைத்தம் அடைய வேண்டுமா?

ஐந்து அங்குல இடைவெளியில் அமிர்தமிருந்தும்

பட்டினி கிடந்து பழகியதுண்டா?

காதலித்து பார்...



சின்ன சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே

அதற்க்காகவேணும்

புலங்களை வருத்தி புதிர்ப்பிக்க முடியுமே
அதற்க்காகவேணும்

ஆண் என்ற சொல்லுக்கும், பெண் என்ற சொல்லுக்கும்

அகராதியில் ஏறாத அர்த்தங்கள் விலங்குமே

அதற்க்காகவேணும்

வாழ்ந்து கொண்டே சாகவும் முடியுமே

செத்துக்கொண்டே வாழவும் முடியுமே,

அதற்க்காகவேணும்

காதலித்து பார்...



சம்பிரதாயம் சட்டை பிடித்தாலும்

உறவுகள் உயிர் பிழிந்தாலும்

விழித்து பார்க்கையில் உன் தெருக்கள் களவு போய் இருந்தாலும்

ஒரே ஆணியில் இருவரும் சக்கனை சிலுவையில் அறையபட்டாலும்

நீ நேசிக்கும் அவனோ அவளோ உன்னை நேசிக்க மறந்தாலும்

காதலித்து பார்...



சொர்கம், நரகம் இரண்டில் ஒன்று இங்கேயே நிச்சயம்

காதலித்து பார்.........


வைரமுத்து



வைரமுத்துவின் கவிதைகள்

இறக்கமுடியாத சிலுவைகள்
சொன்னவள் நான் தான்!
உங்களுக்கும் சேர்த்து
நான் தான் சுவாசிக்கிறேன்
என்று சொன்னவள் நான் தான்!

உங்களைத் தவிர
என் கண்களுக்கு
எதையும் பார்க்கத் தெரியவில்லை
என்று சொன்னவள் நான் தான்!

உங்கள் வாழ்க்கை என்னும் கோப்பையை
என் உயிர் பிழிந்து ஊற்றி நிரப்புவேன்
என்று சொன்னவள் நான் தான்!

நம் கல்யாணத்தில்
கடல் முத்துக்களையும்!...
வானம் நட்ஷத்திரங்களையும்!...
அட்ஷதை போடும்
என்று சொன்னவள் நான் தான்!

நாம் பிரிந்தால்
மழை மேல் நோக்கிப் பெய்யும்!
கடல் மேல் ஒட்டகம் போகும்!
காற்று மரிக்கும்!
என்று சொன்னவள் நான் தான்!

இதோ அடிக்கோடிட்ட வார்த்தைகளால்
இதைச் சொல்வதும் நான் தான்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

நான் காதல் கொண்டது நிஜம்!
கனவு வளர்த்தது நிஜம்!
என் ரத்தத்தில்
இரண்டு அனுக்கள் சந்தித்துக் கொண்டால்
உங்கள் பெயரை மட்டுமே உச்சரித்தது நிஜம்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

காதலரைத் தெரிந்த எனக்கு
காதலைத் தெரியவில்லை!
இந்தியக் காதல் என்பது
காதலர்களோடு மட்டும் சம்மந்தப் பட்டதில்லை!

இந்தியா காதலின் பூமி தான்
காதலர் பூமியல்ல!

காதலுக்கு சிறகு மட்டுமே தெரியும்!
கால்யாணத்திற்குத் தான்
கால்களும் தெரியும்!

எனக்குச் சிறகு தந்த காதலா
என் கால்களின் லாடத்தை யாரறிவார்?...

என் தாயை விட
சாய்வு நாற்காலியை
அதிகம் நேசிக்கும் தந்தை!

சீதனம் கொணர்ந்த
பழைய பாய் போல்
கிழிந்து போன என் தாய்!

தான் பூப்பெய்திய செய்தி கூட
புரியாத என் தங்கை!

கிழிந்த பாயில் படுத்தபடி
கிளியோபாற்ராவை நினைத்து
ஏங்கும் என் அண்ணன்!

கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில்
கலர்க் கனவு காணும் என் தம்பி!

அத்தனை பேருக்கும்
மாதா மாதம் பிராணவாயு வழங்கும்
ஒரே ஒரு நான்!

கால்களில் லாடங்களோடு
எப்படி உங்களோடு ஓடி வருவேன்?...
என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

ஐரோப்பாவில்
கல்யாணத் தோல்விகள் அதிகம்!
இந்தியவில்
காதல் தோல்விகள் அதிகம்!

இந்தியா காதலின் பூமி தான்!
காதலர் பூமியல்ல!

போகிறேன்!
உங்களை மறக்க முடியாதவளை
நீங்கள் மறப்பீர்கள்
என்ற நம்பிக்கையோடு போகிறேன்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

Popular posts from this blog

நண்பனின் திருமண நாள் நினைவுடன்....

இரண்டாவது படைப்பு (காற்றாடிமலை கடிதங்கள் - தேவசகாயம்)