எழுதிய புத்தகங்கள்



I. காற்றாடிமலைக் கால்தடங்கள்


இறை ஊழியர் தேவசகாயத்தைப் பற்றிய பல
புத்தங்களின் வரிசையில் இப்புத்தகமும் புதிதாய் சேர்கிறது.
நதிகள் பலவாயினும் சங்கமிக்கும் கடல் ஓன்று தானே.
வரலாற்றுப் பார்வையிலும், அரசியல் பார்வையிலும்
இவரது வாழ்க்கை வரலாற்றை பலரும் படைத்துள்ளனர்.
பாடப் புத்தகங்களுடன் பள்ளிப் படிப்பையும், பலக்
கனவுகளுடன் கல்லூரிப் படிப்பையும் பயின்று கொண்டிருக்கும்
மாணவர்கள் நமது மறைசாட்சியையும் பத்தோடு பதினொன்று
என பார்த்துச் செல்வதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த மாணவர்களின் மனங்களில் மறைசாட்சியை நிலை
நிறுத்துவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்.
    
வாழ்க்கைச் சூழ்நிலையை
வாழ்வு முறைகளுடனும்
திருச்சபைப் பணியை
வசந்த பூக்களுடனும்
படைக்க முயற்சித்திருக்கிறோம்.

இறை ஊழியரின்
காலடித் தடங்களை
இங்கே தடயங்களுடன்
பதித்திருக்கிறோம்.

இளமை முதல் இறப்பு வரை
இயன்றவரை ஏடுத்துரைத்திருக்கிறோம்.
இந்த மாமனிதரின் சமூகப் பாங்கை
இதில் சத்தமில்லாமல் சித்திரமாக
வரைந்திருக்கிறோம்.

'இவர் தானே!' என்று எண்ணியவர்களுக்கு
'இவரா!' என்ற இறைச் சிந்தனையை
வெள்ளை இலையில் விளம்பியிருக்கிறோம்.

'மறைசாட்சி' ஏன்று
மனதில் நிறுத்தியவர்களுக்கு
மகிழ்வை மறுபிறவி அ
டையச் செய்திருக்கிறோம்.

கேள்வி பதில்களாய்
   
ந்தப் புத்தகத்தில்
   
றை ழியர் தேவசகாயத்தை
    விதையாய் பதியம் போட்டிருக்கிறோம்.
விளைச்சல் தரும்
ன்ற நம்பிக்கையில்......



காற்றாடிமலைக் கால்தடங்களை download செய்ய இங்கே Click செய்யவும்

Download


II. காற்றாடிமலைக் கடிதங்கள்


காற்றாடிமலை
மறைசாட்சியின் மலர் பாதங்கள் பதிந்த இடம்
இறையாட்சியின் விளைநிலமாய் உதித்த இடம்
மெழுகுவர்த்திகளும் மௌனம் தேடும் இடம்
ஊதுபத்திகளும் ஊரறியச் செய்யும் இடம்
பாறைகளும் கவிபாடும் இடம்
வாதைகளும் ஆகன்றோடும் இடம்
சிறைகளும் சித்திரத்தைக் கண்ட இடம்
குறைகளும் சிகரத்தை ஆடைந்த இடம்
தோட்டாக்கள் தோல்வியை சந்தித்த இடம்
தோழராய் எதிரிகளும் சந்தித்த இடம்
ஓட்டுமொத்தத்தில்
இறை ஊழியரின் மங்காத மறுபக்கத்திற்கு மை தந்த இடம்

இத்தகைய காற்றாடிமலையில் வேட்டையாடப்பட்ட இறை
ஊழியர் தேவசகாயம் ஆவர்களின் வாழ்வையும், பணியையும் கடிதங்கள்
வடிவில் இந்தப் புத்தகத்தில் விளக்கியிருக்கிறோம்.






காற்றாடிமலைக் கடிதங்களை download செய்ய இங்கே Click செய்யவும்

Download


III. காற்றாடிமலைக் கதிரவன் 

பிறர்சுவைக்க இதழ்விரித்து இனிய தேன்கொடுத்து
தன்சுவை தனைமறந்து சக்கையாய் மாறிவிடும்
சுவைமிகு பூவுக்கு சன்மானம் உண்டா?...

பிறரை அழகுபடுத்தி அழகுக்கு அழகு சேர்த்து
பிறர் மணம்வீச தன்மணம் தானம்செய்து
வாடிய பூவுக்கு வழித்தடம் உண்டா?...

காலையில் கூந்தலிலே கருத்தாகக் குடியேறி
மாலையில் சாலையிலே சருகாக எறியப்படும்
மணமான பூவுக்கு சரித்திரம் உண்டா?...

ஆனால் ...
வாடாத பூவொன்று வானவில்லின் வண்ணத்தில்
ஊரெல்லாம் ஊர்வலமாய் பயணங்கள் மேற்கொண்டு
வரலாற்றில் வாழ்ந்ததாக வழித்தடம் உண்டு.

சாகாத பூவொன்று சங்கடங்கள் அனைத்தையுமே
சாதனையாய் மாற்றிவிட்டு நறுமணத்தோடு சலனத்தை
சளைக்காமல் ஏற்படுத்திய வரலாறு உண்டு.

அந்தப்பூவே... இறை ஊழியர் தேவசகாயம். 

இந்த அதிசயப் பூவை கசங்கிடாமல் கோர்த்தோம்
எடுத்துச்சூட வாருங்கள் மங்காத மணத்துடனே
உங்கள் வாழ்வும் வளமாகும்.




காற்றாடிமலைக் கதிரவன் download செய்ய இங்கே Click செய்யவும்

Download

 
Online Ebook Reading



IV. Kattadimalai Martyr 

It is really a pleasure to prepare this small booklet on the life of the Servant of God,
Devasahayam. Since the two previous Tamil books, Kattadimali Kaalthadankal (Footsteps) and Kattadimalai Kadithangal (Letters) and a booklet, Kattadimalai Kathiravan (Biography) received such a warm reception from pilgrims and readers, it was considered useful to provide an English booklet about the Martyr in the user-friendly form of frequently asked questions and answers. Hope this will be
useful to anyone wanting a quick reference about the Martyr.




Download


Comments

Popular posts from this blog

நண்பனின் திருமண நாள் நினைவுடன்....

இரண்டாவது படைப்பு (காற்றாடிமலை கடிதங்கள் - தேவசகாயம்)