Posts

Showing posts with the label கவிதை

கிறிஸ்த்து பிறப்பு நல்வாழ்த்துக்கள்

Image
மார்கழி குளிரில்.. மாட்டிடை தொழுவில்..  மரியின் மடியில்.. மழலையாய் வந்துதித்தவர்..    நம் வாழ்க்கையில்.. வசந்தத்தை வாரி இறைக்க.. வாழ்த்துக்களுடன்..  

தீபாவளி வாழ்த்துக்கள்

Image
தீபாவளி வாழ்த்துக்கள்.... புல்வெளியில் சிதறி கிடக்கும் வான்வெளி வின்மீன்களாய் - என் கண்விழியில் பரவி கிடக்கும் - இந்த தீபஒளி திருநாளில்...... அகம் மகிழ்ந்து அன்பு பொங்கி முகம் மலர்ந்து தினம் சிரிக்க – என் மனம் திறந்து வாழ்த்துகிறேன் - இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Veeravilaicolony X-MAS Function.avi

Image

இன்னும் ஒருமுறை உம் மகனாக...

Image
பதிவிற்கு தரம் கொடுக்கவும்..... http://tamilnanbargal.com/tamil-kavithaigal/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95 அனலே..அழகே..முக்கனியே..முழு முதல் தலைவியே..   பூங்குருத்தே..புது தேரே..ஆழ்கடல் முத்தே..என் உயிர் சொத்தே.. அழும் போது அணைத்து விழும் போது தாங்கி சிரிக்கும் போது மகிழ்ந்து சிறப்படைய செய்த வான் முகிலே... சிந்தையில் உன்னை நிறுத்தி விந்தையில் வியக்கிறேன்.. உன் மகனாய் நான் ஆனதால்... இன்னும் ஒருமுறை உம் மகனாக... பள்ளி முடிந்தவுடன் பையை தூக்க... விடியுமுன் சமைத்து கல்லூரி வழியனுப்ப... தொலைகாட்சி முன்பு எனக்கு சோறூட்ட... அடம்பிடிக்கும் போது குளிப்பாட்ட.. முந்தானையால் தலை துடைக்க... சொல்லாமல் போகும் போது தெருவெங்கும் தேட.. மதிப்பெண் குறையும் போது திட்ட.. பண்டிகை காலங்களில் துணியெடுக்க... நெற்றியில் முத்தமிட்டு நெடு பயணத்திற்கு வழியனுப்ப... என் தொலைபேசி அழைப்புக்காக காத்திருக்க... ...

மாமனை மகிழ்விக்க வந்த மா மழையே வா..!

Image
  God has blessed my sister with a baby girl.. பஞ்சு கால்களால் எங்கள் நெஞ்சுக்குள் மஞ்சம் கொண்ட மங்கள தேவதையே வா..! மே தினத்தில் சிறகடித்த செருந்தி மலரே வா..! அழுகையில் ஆனந்தத்தை தந்த அதிசய நிலவே வா..! பூ மடலுக்குள் புண்ணகையை தாங்கிய பூங்காவனமே வா..! மாமனை மகிழ்விக்க வந்த மா மழையே வா..!

என் இனிய வீடு.

Image
 என் இனிய வீடு. தன் எடையை விட 50 மடங்கு  எடையை தூக்கும் எறும்பை போல தன் தகுதிக்கு மீறி எங்களை சுமந்த என் இனிய வீட்டுக்கு அர்ப்பணம். என் இனிய வீடு. 6 பேர் வாழ்ந்து 5 ஆகி இப்பொழுது 2 பேருடன் இனித்துக் கொண்டிருக்கும் இனிய வீடு. தலைசாய்க்க தாய்மடி காட்டி தெம்பூட்ட தந்தைதோள் கொடுத்து கண்ணீர் துடைத்து கவலை மறக்க கைகொடுத்த என் இனிய வீடு. ஓடு கூட்டில் ஓலமிட்டு ஓடும் மின்விசிறி....! பச்சை சுவருக்குள் பல் விழுந்த டுபுலைட்.....! தெருவில் புதைந்த படிக்கட்டு...! இருளுக்கு மணம்முடிக்கப் பட்ட சிறிய அறை.....! ஆணியில் உயிரை அடகுவைத்த அஜந்தா கடிகாரம்...! கண் இழந்த கண்ணாடி..! என்று இன்றும் பிரமிக்க வைக்கிறது. மழை துளிக்காக மடி காட்டி மதி ஒளிக்காக மேடையிட்டு துயில் எழும் போது துதி பாடி ஓன்றாக கலந்த ஓரவஞ்சனை இல்லாத ஒரு உயிர். பல வர்ணங்களில் பார்வையை பதித்த இந்த பகலவன் இன்று சற்று தலைமறைவாகி தலைசாய்க்கிறான். தன் உடையை மாற்றி நடையெடுக்க தயாராகிறான். பச்சை மணலுக்குள் பதியப்பட்டவன் - இன்று சுட்ட செங்கலுக்குள் சுடராகிறான். தாவாணிக்குள் தள்ளாடியவன் - இன்று முழு...

பொங்கலாய் பொங்குவோம் புதுபொலிவுடன்........!

Image
கருப்பு உடம்பில் தழும்பு தாங்கி தலை நிமிர்ந்த கரும்பாய்  இனிப்போம். கோபுரத்தின் உச்சியில் கொடியசைக்கும் நெற்பயிறாய்  சிரிப்போம்.   கதிரவனின் கண்ணசைவில்  கண்விழிக்கும் மண்பானையின் மடியில் தவிழும் பொங்கலாய் பொங்குவோம் புதுபொலிவுடன்........! வண்ணக் கோலங்கள் நம்  எண்ணக் கதவுகளை தாழ் திறவட்டும்.   இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

புலரும் புத்தாண்டு..... 2012

Image
புலரும் புத்தாண்டு.....   தெருவோர சோடியம் விளக்கருகில் சோடிக் கிளிகளின் கண்ணில் மின்னித் தெரிக்கும் வான வேடிக்கையாய் தூரலில் நனைந்து தலையாட்டி தாலாட்டும் பச்சை இலையின் நரம்பில் நகரும் நதியோட்டமாய் ஒரே கூட்டுக்குள் சீருடை அணிந்து சிரிக்கும் எறும்புடன் ஒட்டிக்கொள்ளும் சிறு துளி இனிப்பாய் இருக்கட்டும். அன்பு அவனியை ஆளட்டும். நினைத்த எண்ணங்கள் நிறைவேறட்டும். இறையருள் நம்மை வளப்படுத்தட்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள்....

இனிய கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்து​க்கள்.

Image

எங்கள் தெரு...

Image
எங்கள் தெரு... வீரவிளைக்காலனி... கன்னியாக்குமரி மாவட்டத்தில்,      நாக ர்கோவில் நகரத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில், தோவாளை வட்டாரத்தில், பூதப்பாண்டி பஞ்சாயத்திற்குட்பட்ட திட்டுவிளை கிராமத்தில் உள்ள ஒரு தெரு. மூன்று மதங்களால் சூழப்பட்டு, நல் மனத்தவர்களால் ஆளப்பட்டு, தென்னை மரங்களைத் திண்னையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட நைல் நதி. நீண்டு செல்லும் இந்த நைல் நதியின் இருபக்கம் வீடுகளாலும் நடுபக்கம் சிமெண்ட் சாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட பகுதி. கழிவு நீர்க்கால்வாய்களும் இந்த நதியில் கலப்பதுண்டு. திட்டுவிளை கிராமத்திற்கு இத்தெரு பிரசிதிபெற்றது. சிறார்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என எல்லோரும் எப்பொழுதுமே சுறுசுறுப்பாகக் காணப்படும் இடம். ஆற்று நீர் ஆவேசப் பட்டால் கொஞ்சம் ஆத்திரம் தனிய இந்த நதிக்குள் நடனமாடும். பாண்டி விளையாட்டு, நொண்டி விளையாட்டு, கள்ளன் போலீஸ் விளையாட்டு, பல்லாங்குழி, கோலி குண்டு(களச்சி), குச்சியாம் பிள்ளை, ஆடு புலி, கபடி, வாலிபால் என அறியா வயதில் மண் தரையில் உழன்று மல்லுக்கட்டின நாட்கள் தான் எத்தனை. 'பூப்பறிக்க வருகிறோம் வருகி...

அவளுடன் நடந்து பார்..........

Image
அவளுடன் நடந்து பார்.......... உலா வரும் தேரில் ஏறி நிலா வரும் நேரம் சிப்பிக்குள் துயில் கொள்ளும் முத்து தப்பித்து தோரணத்தில் தொங்கி கொள்ளும் நேரம் வாடைகாற்றுடன் மல்லாக்கு நிற்கும் மரகீற்றுகளும் மயங்கி வரவேற்கும் நேரம் குட்டைபாவாடையில் திட்டையை திணரவைக்கும் என்னவள் விழிக்கும் அந்த நேரம். வார்த்தையில் வரும் அவளது வசந்தம் வருடம் முழுவதும் நம்மை அவள் வசப்படுத்தும். மழைச்சாரல் கூட மறைந்து கொள்ளும் இவளது மழலை சாரலைக் கண்டால் பஞ்சாமிர்தமும் பயந்தே தலையாட்டும் இந்த தஞ்சாவூர் பொம்மையின் தலைஅசைவில். பட்டுவர்ண துணியில் பஞ்ச வர்ண புறாவின் பாசமுகம் கோபபட்டவர்களையும் குதுகலப்படுத்தும். கோபப்படும் தென்றல் கூட தனிந்துவிடும் இவளைக் தொட்டால். வல்லாரை கீரைக் கூட இவளிடம் ஞாபக சக்தியை கேக்க வேண்டும். திசைமாறும் பறவைகளும் இசைகரம் விரிக்கும் பூக்களும் இவளிடம் குடியேற இடம் பெயறும். மேலோக அருவி மேகம் கீலோகம் நோக்கி பயணிக்கும் இவளுக்காக. தேனமிர்தமும், பாலமுதமும் இவள் வாய்பட வாடி நிற்கும்.   பார்ப்பவர்களை பாசவலைக்குள் பத்திரபடுத்தும் அவள் இனிமை....! எல்லோருக்கும் பிடி...

'மீண்டும்'

Image
 'மீண்டும்' கல்லறைக்காக இடம் கேட்கிறேன் தாயே – மீண்டும் உன் கருவறையை

இல்லை – ஆனால்

Image
இல்லை – ஆனால் இல்லை.. கார்முகிலோடு கைக்கோர்த்து நடந்ததில்லை வீசும் தென்றலோடு தென்மாங்கு பாடி ஆடியதில்லை பாடித் திரியும் பறவைகளுடன் பாசாங்கும் செய்யவில்லை நிலவுடன் நிதானமாக நின்றதுமில்லை மதியுடன் மகிழ்ந்து விளையாடியதுமில்லை இயற்க்கையுடன் இன்பம் களிக்கவும் இல்லை ஆனால்.. நல்ல உள்ளங்களோடு கைக்கோர்த்து நடந்திருக்கிறேன் வாசம் வீசும் கலையரங்குகளில் தென்மாங்கு பாடி ஆடியிருக்கிறேன் பாசப் பறவைகளுடன் பல அரங்கேற்றங்களை செய்திருக்கிறேன் நட்புடன் நிதானமாக இருந்திருக்கிறேன் மழலையருடன் மகிழ்ந்து விளையாடியிருக்கிறேன் எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனுக்காக – துன்பத்திலும் இன்பத்தை கண்டிருக்கிறேன்..... களித்திருக்கிறேன்!

மடி

Image
மடி துன்பம் போக்கி இன்பம் தந்த இனிய மடி சோர்வை போக்கி தெம்பை தந்த தெளிந்த மடி மடமை போக்கி அறிவை தந்த அன்பு மடி பயம் போக்கி துணிவை தந்த தூய மடி சோகம் போக்கி மகிழ்வை தந்த மலர்ந்த மடி தோல்வி போக்கி வெற்றி தந்த வெள்ளை மடி அதுதான் - என் தாயின் மடி!

'காதலி'

Image
'காதலி' மூன்றெழுத்து 'சொந்தக்காரி' சூழ்ச்சி மிக்க 'சூனியக்காரி' வம்புக்கு வரும் 'சண்டைக்காரி' ஆட்டிபடைக்க நினைக்கும் 'மந்திரவாதி' எனக்கு பிடிக்காத 'அரசியல்வாதி' உறவை முறிக்கும் 'சுயநலவாதி'  அவள்தான் கண்டவர்களுக்கு பிடிக்கும் 'காதலி'

எனக்கு பிடித்தவர்! மாபெரும் வழிகாட்டி!

Image
எனக்கு பிடித்தவர்! மாபெரும் வழிகாட்டி! எனக்கு பிடித்தவர்! என்னை பிடித்தவர்! சமுதாயப் படிக்கட்டில் கால் ஊன்ற சொல்லிக் கொடுத்தவர்.... வாழும் சூழ்நிலையில் மனிதர்களின் உணர்வை புரிந்துக் கொள்ள வழிக்காட்டியவர்... வாழ்வின் சுக துக்கங்களை அனுபவிக்க என்னை அழைத்து சென்றவர்... நவீனக் கால சூழலுக்கு ஏற்றார் போல் என்னை அழகுபடுத்தி மகிழ்ந்தவர்... இருண்ட நெஞ்சத்தில் புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தி ஒளியூட்டியவர்... பகைமை குணத்தை அகற்ற புதிய பாதையைக் காட்டியவர்... தன்னோடு உறவாட, உறையாட எனக்கும் அனுமதி அளித்தவர்... என் கருத்துக்கும் சிந்தனைக்கும் அடித்தளமிட்டவர்.... சிந்தனையை சீர்துக்கி பார்க்க தூண்டியவர்... வாழ்க்கை பாதையை தேர்வு செய்ய உதவிய உத்தமர்... மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ அவர் என் மாபெரும் வழிகாட்டி! எனக்கு பிடித்தவர்!

என் நண்பன்!

Image
என் நண்பன்! என்னை விட பிறரை தாக்குவதில் வலிமையானவன்! என்னோடு என் அறையில் காலம் தாழ்த்தாமல் வருபவன்! தங்குபவன்! கடமையின் மறுபெயரோ அவன் - தெரியவில்லை இருந்தாலும் என்னிடம் அவன் செய்யவந்த கடமையை சரியாக செய்துமுடிப்பவன்! வாழ்க்கையின் வட்டத்தை சுற்றி தளர்ந்து நான் சோர்வுறும் நிலையில் விடாமுயற்சியின் எடுத்துக்காட்டாய் திகழ்பவன்! மனம் சோர்வுற்று கண் அயர்ந்து தூங்கும்போது அதட்டலான அடியால் என்னை எழுப்பியவன்! வலிமையான வலியை உடலில் ஏற்படுத்தி மனதின் வலிமையை சோதிப்பவன்! நான் பிறறோடு பேசுவது கூட அவனுக்கு பிடிக்காதோ என்னவோ உடனே என்னை தன்பக்கம் இழுத்துக் கொள்பவன்! என்னோடு ஒன்றாக இருந்து என் இரத்தத்தோடுக் கலந்தவன் ஏனென்றால் அவன் வாழ்வதற்காக என் இரத்தத்தையும் கொடுத்தவன்! அதட்டலான அடியும், வலிமையான வலியும் கொடுத்தாலும் கூட என்னை விட்டு நீங்காதிருப்பவன்! நான் கேட்டால் உயிரையும் கூட தருபவன்! பணத்தாலும் கூட அவனை என்னிடமிருந்து பிரிக்க முடியாது! அவன் என்னை விட என் உடம்பில் அதிக சுதந்திரத்தை எடுத்துக் கொள்பவன் ! என் உடல் நலம் அவன் கையில்! என்னை விட பிறரை தாக்குவதி...

வெறுக்கிறேன் - உனக்காக !

Image
வெறுக்கிறேன் - உனக்காக ! அம்மா ! நீ பொட்டு வைக்க முடியாது என்பதால்    உன் மொட்டு போன்ற நெற்றிக்காக – அந்த   பொட்டையும் கூட வெறுக்கிறேன் - உனக்காக ! அம்மா !                 நீ பூச்சூட முடியாது என்பதால்                உன் பூ போன்ற முகத்திற்காக – அந்த                பூவையும் கூட வெறுக்கிறேன் - உனக்காக ! அம்மா !                  நீ பட்டாடைகள் உடுத்த முடியாது என்பதால்                 உன் கனிந்த உள்ளத்திற்காக – அந்த                 பட்டாடைகளையும் கூட வெறுக்கிறேன் - உனக்காக ! அம்மா !   ...

எங்கள் ஆசிரியரே..!

Image
எங்கள் ஆசிரியரே..! மனக்கோட்டையின் தெய்வமே...!                  மாற்றத்தின் வழித்தடமே...! வாழ்த்துக்கள் கூற எங்கள் உதடுகள் முற்படும் போது எங்கள் மன வார்த்தைகள் எழுத்து வடிவில் ஏனோ நான்தான் என்று முந்திக் கொள்கிறது. எழுத்தறிவித்த உங்களுக்கு எங்கள் நன்றி கலந்த வணக்கங்கள்....! வறண்ட வகுப்பறையில் எங்களுக்கு வசந்தம் நீங்கள்! இருண்ட இதயங்களுக்கு புத்துணர்வு தந்த பூபாளம் நீங்கள்!         Ice Cream – Mf> Sweet – Mf> வாழ்த்து அட்டையாக,           அரட்டையாக, நகைச்சுவையாக, பாடமாக பழகிய பாதையில்           வீசிய வசந்தம் நீங்கள்.           ஆசிரியர் என்ற ஆணவம் அறவே இல்லாமல்           அமைதியாக வலம் வந்தவர்கள். உடனிருந்த உருவமில்லா ஒளியே! எங்கள் விழியே!     ...

சொர்க்கத்தின் திறப்பு விழா........

Image
சொர்க்கத்தின் திறப்பு விழா........ சொர்க்கமே என்றாலும் அது CSC போல வருமா? CSC என்றாலே அதில் 'A' Section Gilli தானம்மா.. பல தேசம் கொண்ட பாசக்கிளிகள் இங்கு தான் பறந்ததம்மா...                                       I பெஞ்சி மேல ஏறி சாக்பீஸ் எறி வாங்கி வந்த ஒரு காலமல்லவா!... friendship day- ன்னு சொல்லி சாயத்ததான் பூசி நொந்த ஒரு நிகழ்வல்லவா!..... H.O.D- அ பார்த்து அப்பாலஜி எழுதி என்ன ஒரு ஆட்டம் பாட்டம் டா.. 8 பேரு Placed டு 10 பேரு waste டு என்ன ஒரு combination டா..... அட டூரு என்ன டூரு அதில் 3rd year ஜோரு Final Year பாரு – அட போகலத்தான் கேளு யார கேட்க எல்லாமே முடிஞ்சி.