Posts

Showing posts with the label திருமண வாழ்த்து

சித்திரையில் வரைந்த சித்திரமே...பார்த்த கண்களுக்கு விசித்திரமே...

Image
சித்திரையில் வரைந்த சித்திரமே...பார்த்த கண்களுக்கு விசித்திரமே... மல்லிகையை...மணம் மாறா மனம் கொண்ட சதிபதியே...  பைந்தமிழில் சொல்லெடுத்து நாலடியில் நடையெடுத்து முத்தமிழால் முத்தமிட்டு இருகரம் பிடிக்கும் இருவருக்கு ஓரு மனதார வாழ்த்துக்கள் திருமண வாழ்த்துக்கள். வரிசையாய் வாகனம் நீண்ட பயணம் ஆச்சரியமான ஆலயம் அழகான திருமணம். இனிப்பான உணவு புதுமையான அனுபவம் பதியதொரு அத்தியாயம் அத்தியாத்தில் ஓர் அதிசயம். வாடாத பூக்கள் இரண்டு வானவில்லின் வர்ணத்தில் வலம் வந்தது. மூடாத சிப்பி ஒன்று அழகான முத்து ஒன்றை அசைந்தாடி சுமந்து வந்தது. பூங்காற்று புல்லாங்குழலுடன் கைகோர்த்து பது நடைபோட்டதைக் கண்டு ஒரே இடத்தில் நின்று பறக்கும் தட்டாம் பூச்சியாய் மனம் மயங்கி நின்றது. குறையாத கல்வி நிறைவான அறிவு நீண்ட ஆயுள் வற்றாத ஆற்றல் வளமையான இளமை தொலையாத துணிவு முழுமையான பெருமை அதிகமான பொன் அளவான பொருள் அதிராத புகழ் திரளான நிலம் பெயர் சொல்லும் நன்மக்கள் கல்லமில்லா நம்பிக்கை நொடிபொழுதிலும் நோயின்மை அடங்காத முயற்சி அணையாத வெற்றி என தமிழ் கூறும் பதினாறு பெற்று வாழ சி...

நண்பனின் திருமண நாள் நினைவுடன்....

Image
நண்பனின் திருமண நாள் நினைவுடன்....                          இரு மனத்திற்கும் வாழ்த்துக்கள்....... இன்று பூமியில் புதிதாய் பிறந்த பூக்களைக் கொண்டு வாழ்த்துகிறேன். வருடம் பல கடந்து வரங்கள் பல வாங்கி வாழ இந்த நண்பனின் பாசம் கலந்த வாழ்த்துக்கள்! காதல் சமுத்திரத்தை கடந்து சாதித்தவனே...வாழ்த்துக்கள்! ஜோசப் காலனிக்குள் இருந்து ஜோஸ்பினை வெற்றிக் கொண்டவனே...வாழ்த்துக்கள்! திட்டுவிளை பெற்ற தேனமுதே...வாழ்த்துக்கள்! இசை இராகம் காது மடல்களை தாழ் திறந்தது. சொந்தங்களின் சந்தோசம் காலனியை கலகலப்பாக்கியது. தலைவாழை குலை வந்தவரை வரவேற்க தலைமை தாங்கியது. சூரியனின் பக்கத்து வீட்டுகாரன் சீரியல் பல்பும் சிரித்தது. மணமக்கள் உள்ளூர் தொலைகாட்சியில் உலா வந்தனர். வாழ்த்த வருபவர்களும் வந்த வண்ணமாகவே இருந்தனர். ஆயிரம் அல்லிக்குள் இரு தாமரையாய் மணமக்களின் வாகன ஊர்வலம். ஒருபக்க கவிதைக்குள் முதல் வரியாய் தங்கமலர்களின் ஒய்யார தோரணை. புல் தரையில் காலை பனிதுளியாய் காதலர்களின் மலர்...

தரணியில் உதித்த தங்கமலர்களே...!

Image
தரணியில் உதித்த தங்கமலர்களே...!  பவள ஏட்டில் பொன் எழுத்துக்களால்  என் வைரக் கவிதையால் வாழ்த்துகிறோம். நவரத்தின கூட்டுக்குள் ஈருடல் ஓருயிராய் மணம்பரப்புங்கள். வெள்ளி அருவியென இரு மனமும் ஒரு மனமாய் ஒளி வீசுங்கள். சிப்பிக்குள் முத்தாய் இல்லறத்தில்; இலக்கணம் காணுங்கள். உங்களது..... வாழ்வின் இனிமையை சரித்திரம் கூட விசித்திரம் என சித்தரிக்கட்டும். பாசத்தின் பிணைப்பை பூக்கும் பூக்கள் கூட வாசம் என உணர்த்தட்டும். அன்பின் வலிமையை அவனி கூட அதிசயம் என வியக்கட்டும். அட்சய பாத்திரமாய், மங்கா ஒளிவிளக்காய் மகுடம் சூட, நட்சத்திர பந்தலில் தோரணம் கட்டி வட்ட நிலவில் பொட்டு செய்து ஒய்யாரக் கதிரோனை தீபமாய் ஏற்றி விரிந்த வானமுமாய் பரந்த மனதுடன் வாழ்த்துகிறோம்...