Posts

Nice CSE ‘A’ Batch 2007– Get together - கால் தடங்களின் நினைவுகளில்......

Image
கால் தடங்களின் நினைவுகளில்...... டேய்!.. அவன் வருவானா? இவள் வருவாளா? யாரெல்லாம் வருவார்கள் எனக் கேட்டுக் கொண்டே எங்களது கல்லூரி நண்பர்களின் முதலாமாண்டு சந்திப்புக்கான ஆயத்தம் தொடங்கியது. மின்னஞ்சலில் ஓட்டு நடத்தி கருத்துக்கணிப்புக் கேட்கப்பட்டது. கருத்துக் கணிப்பில் பெருமளவு வாக்கு பதிவாகாவிட்டாலும் ஆயிரம் நட்சத்திரத்திற்குள் ஒரு நிலவாய் எங்கேயோ சில முகங்களின் முகவரிகள் தெரிவதை உணர முடிந்தது. ஏன் இந்தியாவின் பல வாக்கு சாவடிகள் வெறுச்சோடிக் கிடக்கும் போது, கடற் மணலுக்குள் கால் புதைந்தது போல ஆங்காங்கே தொலைவில் வேலையில் இருந்துக் கொண்டு மின்னஞ்சலில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய இயலவில்லை என்று நினைக்கும் போது ஆறுதல் தான். சாத்தியப்படுமா? சந்திப்பு நிகழுமா? என்றக் கேள்விக் கணைகள் மனக்கோட்டையை தகர்ப்பதை தடுக்க முடியவில்லை. உளி இறங்கிய சிலையாய் மாறுமா? அல்லது வெடி இறங்கிய பாறையாய் சிதறுமா? என்ற சிந்தனை ஓட்டம் இதய அணைகளைத் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது. தொலைபேசி அலைக்குள் எங்களது சந்திப்பின் வரவேற்பு அட்டையை அனுப்பினோம். இலக்கை அடைந்த இணைப்புகள் பயனை தந்தன. பாதிலே பழுதடைந்த இணைப்புகள் ...

'மீண்டும்'

Image
 'மீண்டும்' கல்லறைக்காக இடம் கேட்கிறேன் தாயே – மீண்டும் உன் கருவறையை

இல்லை – ஆனால்

Image
இல்லை – ஆனால் இல்லை.. கார்முகிலோடு கைக்கோர்த்து நடந்ததில்லை வீசும் தென்றலோடு தென்மாங்கு பாடி ஆடியதில்லை பாடித் திரியும் பறவைகளுடன் பாசாங்கும் செய்யவில்லை நிலவுடன் நிதானமாக நின்றதுமில்லை மதியுடன் மகிழ்ந்து விளையாடியதுமில்லை இயற்க்கையுடன் இன்பம் களிக்கவும் இல்லை ஆனால்.. நல்ல உள்ளங்களோடு கைக்கோர்த்து நடந்திருக்கிறேன் வாசம் வீசும் கலையரங்குகளில் தென்மாங்கு பாடி ஆடியிருக்கிறேன் பாசப் பறவைகளுடன் பல அரங்கேற்றங்களை செய்திருக்கிறேன் நட்புடன் நிதானமாக இருந்திருக்கிறேன் மழலையருடன் மகிழ்ந்து விளையாடியிருக்கிறேன் எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனுக்காக – துன்பத்திலும் இன்பத்தை கண்டிருக்கிறேன்..... களித்திருக்கிறேன்!

மடி

Image
மடி துன்பம் போக்கி இன்பம் தந்த இனிய மடி சோர்வை போக்கி தெம்பை தந்த தெளிந்த மடி மடமை போக்கி அறிவை தந்த அன்பு மடி பயம் போக்கி துணிவை தந்த தூய மடி சோகம் போக்கி மகிழ்வை தந்த மலர்ந்த மடி தோல்வி போக்கி வெற்றி தந்த வெள்ளை மடி அதுதான் - என் தாயின் மடி!

'காதலி'

Image
'காதலி' மூன்றெழுத்து 'சொந்தக்காரி' சூழ்ச்சி மிக்க 'சூனியக்காரி' வம்புக்கு வரும் 'சண்டைக்காரி' ஆட்டிபடைக்க நினைக்கும் 'மந்திரவாதி' எனக்கு பிடிக்காத 'அரசியல்வாதி' உறவை முறிக்கும் 'சுயநலவாதி'  அவள்தான் கண்டவர்களுக்கு பிடிக்கும் 'காதலி'

எனக்கு பிடித்தவர்! மாபெரும் வழிகாட்டி!

Image
எனக்கு பிடித்தவர்! மாபெரும் வழிகாட்டி! எனக்கு பிடித்தவர்! என்னை பிடித்தவர்! சமுதாயப் படிக்கட்டில் கால் ஊன்ற சொல்லிக் கொடுத்தவர்.... வாழும் சூழ்நிலையில் மனிதர்களின் உணர்வை புரிந்துக் கொள்ள வழிக்காட்டியவர்... வாழ்வின் சுக துக்கங்களை அனுபவிக்க என்னை அழைத்து சென்றவர்... நவீனக் கால சூழலுக்கு ஏற்றார் போல் என்னை அழகுபடுத்தி மகிழ்ந்தவர்... இருண்ட நெஞ்சத்தில் புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தி ஒளியூட்டியவர்... பகைமை குணத்தை அகற்ற புதிய பாதையைக் காட்டியவர்... தன்னோடு உறவாட, உறையாட எனக்கும் அனுமதி அளித்தவர்... என் கருத்துக்கும் சிந்தனைக்கும் அடித்தளமிட்டவர்.... சிந்தனையை சீர்துக்கி பார்க்க தூண்டியவர்... வாழ்க்கை பாதையை தேர்வு செய்ய உதவிய உத்தமர்... மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ அவர் என் மாபெரும் வழிகாட்டி! எனக்கு பிடித்தவர்!

என் நண்பன்!

Image
என் நண்பன்! என்னை விட பிறரை தாக்குவதில் வலிமையானவன்! என்னோடு என் அறையில் காலம் தாழ்த்தாமல் வருபவன்! தங்குபவன்! கடமையின் மறுபெயரோ அவன் - தெரியவில்லை இருந்தாலும் என்னிடம் அவன் செய்யவந்த கடமையை சரியாக செய்துமுடிப்பவன்! வாழ்க்கையின் வட்டத்தை சுற்றி தளர்ந்து நான் சோர்வுறும் நிலையில் விடாமுயற்சியின் எடுத்துக்காட்டாய் திகழ்பவன்! மனம் சோர்வுற்று கண் அயர்ந்து தூங்கும்போது அதட்டலான அடியால் என்னை எழுப்பியவன்! வலிமையான வலியை உடலில் ஏற்படுத்தி மனதின் வலிமையை சோதிப்பவன்! நான் பிறறோடு பேசுவது கூட அவனுக்கு பிடிக்காதோ என்னவோ உடனே என்னை தன்பக்கம் இழுத்துக் கொள்பவன்! என்னோடு ஒன்றாக இருந்து என் இரத்தத்தோடுக் கலந்தவன் ஏனென்றால் அவன் வாழ்வதற்காக என் இரத்தத்தையும் கொடுத்தவன்! அதட்டலான அடியும், வலிமையான வலியும் கொடுத்தாலும் கூட என்னை விட்டு நீங்காதிருப்பவன்! நான் கேட்டால் உயிரையும் கூட தருபவன்! பணத்தாலும் கூட அவனை என்னிடமிருந்து பிரிக்க முடியாது! அவன் என்னை விட என் உடம்பில் அதிக சுதந்திரத்தை எடுத்துக் கொள்பவன் ! என் உடல் நலம் அவன் கையில்! என்னை விட பிறரை தாக்குவதி...