Posts

Nice CSE ‘A’ Batch 2007– Get together - கால் தடங்களின் நினைவுகளில் - 3

Image
கால் தடங்களின் நினைவுகளில்...... ஓவ்வொருவராக பேச ஆரம்பித்தோம்.வார்த்தைகளை வாடைக்காற்றுடன் பரக்கவிட்டோம். பணியிடங்கள், தங்கும் இடங்கள் பற்றிய அனுபவத்தை அள்ளிவிசினோம். நெடுநாள் சந்திக்காமல் சரிந்துக் கிடந்த நினைவுகள் சில நேரங்களில் சங்கமிக்கத் தொடங்கின. மழைமேகத்தில் தோகைவிரித்து கொண்டாடும் மயில் கூட்டம் போல் எங்களின் காலை பொழுது நிகழ்வுகள் கடந்தன. முதிய உணவு அடுத்த அறையில். ஆறை கண்காணிப்பாளர்கள் செய்து வைத்திருந்த அந்த அலங்கார உணவு உபசரிப்புக் கூடம் எங்களை அப்படியே மடக்கிப் போட்டது. பார்வையிலே பசியை தீர்த்த பெருமை அந்த அறைக்கு இருந்தது. அற்புத ஒளி வெளிச்சத்தில், அளவான சத்தத்தில், அகலமான அறையில் அனைவரும் மதிய உணவை உண்டோம். காலம் கடந்தாலும் இப்படி ஒரு நிகழ்வு கிடைக்குமா? கண்டங்களைத் தாண்டி கடைமைகளை செய்தாலும் இந்த குயில்களின் கூட்டுக்குள் இடம் கிடைக்குமா? ஆயிரம் கணக்கில் அள்ளிப் போட்டாலும் இந்த சந்திப்புக்கு ஈடாகுமா? என்ற சந்தோசம் கண்களுக்குள் இருந்த ஈரத்தை கொஞ்சம் வெளியேக் கொண்டு வந்தன. கடல்கள் சங்கமித்து அலைகளை எழுப்பி, அலைகளின் மேலே நின்று நிலவை பிடித்து, மகுடம் சூட்டுவது போல் ...

Nice CSE ‘A’ Batch 2007– Get together - கால் தடங்களின் நினைவுகளில் - 2

Image
கால் தடங்களின் நினைவுகளில்...... சென்னையா? பெங்களூரா? திருவனந்தபுரமா? சந்திப்புக்கான இடம் எது? நாள் எது? எண்ணங்களை காற்றுவாக்கில் பரக்கவிட்டு காத்திருந்தோம். ஆதிகமானவர்கள் சென்னையில் இருந்ததாலும், திருவனந்தபுர நண்பர்கள் சென்னைக்கு வர சம்மதித்ததாலும், பெங்களூர் நண்பர்களை சென்னைக்கு அழைப்பது சுலபமாயிற்று. நாட்களை எண்ணினோம். விடுமுறையாகவும், அனைவருக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக 28-03-2009 நாளை தேர்ந்தெடுத்தோம். சென்னையில் எங்கே வைத்து நடத்துவது எளிது? என்று தீவிர விசாரித்து சூழ்நிலையையும், நேரத்தையும், உணவையும், இடத்தையும் கருத்தில் கொண்டு இறுதியாக கோயம்பேடு மார்க்கெட்டின் அருகில் உள்ள கோட்டல் ராயல் பிளாசாவை தேர்வு செய்தோம். எனது வெகுதூர நண்பர்கள் அன்று அதிகாலையிலே எனது அறைக்கு வந்துவிட்டார்கள். ஆனால் நான் எதிர்பார்த்த எனக்கு உற்சாகமூட்டிய நண்பனை மட்டும் காணவில்லை. ஒரே வரிசையில் அமர்ந்து, ஒன்று போல் ஓரங்கட்டப்பட்டு, எனது கவிதை கல்லூரி மேகஸினில் வருவதற்கு உந்துதலாக இருந்த என் உள்ளுக்குள் உலாவந்த நிலாவை காணவில்லை. பல வகையிலும் என் பண்புக்கு பாத்திரமான என்னவனைக் கா...

மூன்றாவது படைப்பு (தேவசகாயம்)

Image

Nice CSE ‘A’ Batch 2007– Get together - கால் தடங்களின் நினைவுகளில்......

Image
கால் தடங்களின் நினைவுகளில்...... டேய்!.. அவன் வருவானா? இவள் வருவாளா? யாரெல்லாம் வருவார்கள் எனக் கேட்டுக் கொண்டே எங்களது கல்லூரி நண்பர்களின் முதலாமாண்டு சந்திப்புக்கான ஆயத்தம் தொடங்கியது. மின்னஞ்சலில் ஓட்டு நடத்தி கருத்துக்கணிப்புக் கேட்கப்பட்டது. கருத்துக் கணிப்பில் பெருமளவு வாக்கு பதிவாகாவிட்டாலும் ஆயிரம் நட்சத்திரத்திற்குள் ஒரு நிலவாய் எங்கேயோ சில முகங்களின் முகவரிகள் தெரிவதை உணர முடிந்தது. ஏன் இந்தியாவின் பல வாக்கு சாவடிகள் வெறுச்சோடிக் கிடக்கும் போது, கடற் மணலுக்குள் கால் புதைந்தது போல ஆங்காங்கே தொலைவில் வேலையில் இருந்துக் கொண்டு மின்னஞ்சலில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய இயலவில்லை என்று நினைக்கும் போது ஆறுதல் தான். சாத்தியப்படுமா? சந்திப்பு நிகழுமா? என்றக் கேள்விக் கணைகள் மனக்கோட்டையை தகர்ப்பதை தடுக்க முடியவில்லை. உளி இறங்கிய சிலையாய் மாறுமா? அல்லது வெடி இறங்கிய பாறையாய் சிதறுமா? என்ற சிந்தனை ஓட்டம் இதய அணைகளைத் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது. தொலைபேசி அலைக்குள் எங்களது சந்திப்பின் வரவேற்பு அட்டையை அனுப்பினோம். இலக்கை அடைந்த இணைப்புகள் பயனை தந்தன. பாதிலே பழுதடைந்த இணைப்புகள் ...

'மீண்டும்'

Image
 'மீண்டும்' கல்லறைக்காக இடம் கேட்கிறேன் தாயே – மீண்டும் உன் கருவறையை

இல்லை – ஆனால்

Image
இல்லை – ஆனால் இல்லை.. கார்முகிலோடு கைக்கோர்த்து நடந்ததில்லை வீசும் தென்றலோடு தென்மாங்கு பாடி ஆடியதில்லை பாடித் திரியும் பறவைகளுடன் பாசாங்கும் செய்யவில்லை நிலவுடன் நிதானமாக நின்றதுமில்லை மதியுடன் மகிழ்ந்து விளையாடியதுமில்லை இயற்க்கையுடன் இன்பம் களிக்கவும் இல்லை ஆனால்.. நல்ல உள்ளங்களோடு கைக்கோர்த்து நடந்திருக்கிறேன் வாசம் வீசும் கலையரங்குகளில் தென்மாங்கு பாடி ஆடியிருக்கிறேன் பாசப் பறவைகளுடன் பல அரங்கேற்றங்களை செய்திருக்கிறேன் நட்புடன் நிதானமாக இருந்திருக்கிறேன் மழலையருடன் மகிழ்ந்து விளையாடியிருக்கிறேன் எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனுக்காக – துன்பத்திலும் இன்பத்தை கண்டிருக்கிறேன்..... களித்திருக்கிறேன்!

மடி

Image
மடி துன்பம் போக்கி இன்பம் தந்த இனிய மடி சோர்வை போக்கி தெம்பை தந்த தெளிந்த மடி மடமை போக்கி அறிவை தந்த அன்பு மடி பயம் போக்கி துணிவை தந்த தூய மடி சோகம் போக்கி மகிழ்வை தந்த மலர்ந்த மடி தோல்வி போக்கி வெற்றி தந்த வெள்ளை மடி அதுதான் - என் தாயின் மடி!