Posts

மாமனை மகிழ்விக்க வந்த மா மழையே வா..!

Image
  God has blessed my sister with a baby girl.. பஞ்சு கால்களால் எங்கள் நெஞ்சுக்குள் மஞ்சம் கொண்ட மங்கள தேவதையே வா..! மே தினத்தில் சிறகடித்த செருந்தி மலரே வா..! அழுகையில் ஆனந்தத்தை தந்த அதிசய நிலவே வா..! பூ மடலுக்குள் புண்ணகையை தாங்கிய பூங்காவனமே வா..! மாமனை மகிழ்விக்க வந்த மா மழையே வா..!

என் இனிய வீடு.

Image
 என் இனிய வீடு. தன் எடையை விட 50 மடங்கு  எடையை தூக்கும் எறும்பை போல தன் தகுதிக்கு மீறி எங்களை சுமந்த என் இனிய வீட்டுக்கு அர்ப்பணம். என் இனிய வீடு. 6 பேர் வாழ்ந்து 5 ஆகி இப்பொழுது 2 பேருடன் இனித்துக் கொண்டிருக்கும் இனிய வீடு. தலைசாய்க்க தாய்மடி காட்டி தெம்பூட்ட தந்தைதோள் கொடுத்து கண்ணீர் துடைத்து கவலை மறக்க கைகொடுத்த என் இனிய வீடு. ஓடு கூட்டில் ஓலமிட்டு ஓடும் மின்விசிறி....! பச்சை சுவருக்குள் பல் விழுந்த டுபுலைட்.....! தெருவில் புதைந்த படிக்கட்டு...! இருளுக்கு மணம்முடிக்கப் பட்ட சிறிய அறை.....! ஆணியில் உயிரை அடகுவைத்த அஜந்தா கடிகாரம்...! கண் இழந்த கண்ணாடி..! என்று இன்றும் பிரமிக்க வைக்கிறது. மழை துளிக்காக மடி காட்டி மதி ஒளிக்காக மேடையிட்டு துயில் எழும் போது துதி பாடி ஓன்றாக கலந்த ஓரவஞ்சனை இல்லாத ஒரு உயிர். பல வர்ணங்களில் பார்வையை பதித்த இந்த பகலவன் இன்று சற்று தலைமறைவாகி தலைசாய்க்கிறான். தன் உடையை மாற்றி நடையெடுக்க தயாராகிறான். பச்சை மணலுக்குள் பதியப்பட்டவன் - இன்று சுட்ட செங்கலுக்குள் சுடராகிறான். தாவாணிக்குள் தள்ளாடியவன் - இன்று முழு...

பொங்கலாய் பொங்குவோம் புதுபொலிவுடன்........!

Image
கருப்பு உடம்பில் தழும்பு தாங்கி தலை நிமிர்ந்த கரும்பாய்  இனிப்போம். கோபுரத்தின் உச்சியில் கொடியசைக்கும் நெற்பயிறாய்  சிரிப்போம்.   கதிரவனின் கண்ணசைவில்  கண்விழிக்கும் மண்பானையின் மடியில் தவிழும் பொங்கலாய் பொங்குவோம் புதுபொலிவுடன்........! வண்ணக் கோலங்கள் நம்  எண்ணக் கதவுகளை தாழ் திறவட்டும்.   இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

புலரும் புத்தாண்டு..... 2012

Image
புலரும் புத்தாண்டு.....   தெருவோர சோடியம் விளக்கருகில் சோடிக் கிளிகளின் கண்ணில் மின்னித் தெரிக்கும் வான வேடிக்கையாய் தூரலில் நனைந்து தலையாட்டி தாலாட்டும் பச்சை இலையின் நரம்பில் நகரும் நதியோட்டமாய் ஒரே கூட்டுக்குள் சீருடை அணிந்து சிரிக்கும் எறும்புடன் ஒட்டிக்கொள்ளும் சிறு துளி இனிப்பாய் இருக்கட்டும். அன்பு அவனியை ஆளட்டும். நினைத்த எண்ணங்கள் நிறைவேறட்டும். இறையருள் நம்மை வளப்படுத்தட்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள்....

இனிய கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்து​க்கள்.

Image

இந்த பக்கத்தில் கிறுக்கியவர்கள்.

Image
நெஞ்சிக்கினியவர்களே...! என் பாதையில் பயணப்பட்டு எனக்குள் பாதிப்பை ஏற்படுத்தியவர்களே இந்த பக்கத்தில் கிறுக்கியவர்கள் . நேரடியாகவோ மறைமுகமாகவோ இவர்களிடம் உள்ள ஏதோ ஒன்று என்னை கவர்ந்திருக்கும். உள்ளத்தில் ஊறியதை உருவகப்படுத்திருக்கிறேன். உறுத்தினால் மன்னிக்கவும். உந்தினால் மகிழவும். நீங்களும் கிறுக்கிருக்கலாம். தொடர்ந்து வாசியுங்கள். கருத்தை பதிவு செய்யுங்கள் .  1. பெஞ்சமின்: கண்ணை மூடி தூங்க முடியாத மீனைப் போல உன்னை விட்டு நீங்கி வாழ முடியாது என்னால். ' கல்லமில்லா ஒரு வெள்ளி நிலா', 'உன் திரு யாழிலென் இறைவா' பாடல்களை கேட்க்கும் போது உன் வாய் அசைவு என் இதைய அசைவு. நடிப்பு, படிப்பு என பல வகையிலும் சிறந்தவன். தனிமைக்கு துணையாக பல நேரங்கள் இருப்பவன். தாய் சொல்லை மறுக்காமல் பக்குவமாக கேட்க்கும் பாங்கு இவனை விட யாரிடமும் இருக்க முடியாது. இவனது நடை கூட யாரையும் காயப்படுத்தாது. வீட்டு அனுமதி இல்லாமல் இவன் கண்கள் எதையும் பார்க்காது. பக்குவமாக பேசி கல்லமில்லாமல் சிரிக்கும் அவன் சிகரம். பல நேரங்களில் என்னுடன் இருந்தவன். இருக்கிறவன். இருப்பவன். நான் கூப்பிட்டால் என் கூட எங்...

தமிழ் நண்பர்கள் இணையத்தில் என் கவிதை.

Image
தமிழ் நண்பர்கள் இணையத்தில் என் கவிதை. நன்றி தமிழ் நண்பர்கள். 20-Sep-2011 எங்கள் தெரு... : http://tamilnanbargal.com/tamil-kavithaigal/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81 அன்னை மடி...: http://tamilnanbargal.com/tamil-kavithaigal/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF-0