Posts

Veeravilaicolony X-MAS Function.avi

Image

Veeravilaicolony X-MAS function - Night Function

Image

இன்னும் ஒருமுறை உம் மகனாக...

Image
பதிவிற்கு தரம் கொடுக்கவும்..... http://tamilnanbargal.com/tamil-kavithaigal/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95 அனலே..அழகே..முக்கனியே..முழு முதல் தலைவியே..   பூங்குருத்தே..புது தேரே..ஆழ்கடல் முத்தே..என் உயிர் சொத்தே.. அழும் போது அணைத்து விழும் போது தாங்கி சிரிக்கும் போது மகிழ்ந்து சிறப்படைய செய்த வான் முகிலே... சிந்தையில் உன்னை நிறுத்தி விந்தையில் வியக்கிறேன்.. உன் மகனாய் நான் ஆனதால்... இன்னும் ஒருமுறை உம் மகனாக... பள்ளி முடிந்தவுடன் பையை தூக்க... விடியுமுன் சமைத்து கல்லூரி வழியனுப்ப... தொலைகாட்சி முன்பு எனக்கு சோறூட்ட... அடம்பிடிக்கும் போது குளிப்பாட்ட.. முந்தானையால் தலை துடைக்க... சொல்லாமல் போகும் போது தெருவெங்கும் தேட.. மதிப்பெண் குறையும் போது திட்ட.. பண்டிகை காலங்களில் துணியெடுக்க... நெற்றியில் முத்தமிட்டு நெடு பயணத்திற்கு வழியனுப்ப... என் தொலைபேசி அழைப்புக்காக காத்திருக்க... ...

மாமனை மகிழ்விக்க வந்த மா மழையே வா..!

Image
  God has blessed my sister with a baby girl.. பஞ்சு கால்களால் எங்கள் நெஞ்சுக்குள் மஞ்சம் கொண்ட மங்கள தேவதையே வா..! மே தினத்தில் சிறகடித்த செருந்தி மலரே வா..! அழுகையில் ஆனந்தத்தை தந்த அதிசய நிலவே வா..! பூ மடலுக்குள் புண்ணகையை தாங்கிய பூங்காவனமே வா..! மாமனை மகிழ்விக்க வந்த மா மழையே வா..!

என் இனிய வீடு.

Image
 என் இனிய வீடு. தன் எடையை விட 50 மடங்கு  எடையை தூக்கும் எறும்பை போல தன் தகுதிக்கு மீறி எங்களை சுமந்த என் இனிய வீட்டுக்கு அர்ப்பணம். என் இனிய வீடு. 6 பேர் வாழ்ந்து 5 ஆகி இப்பொழுது 2 பேருடன் இனித்துக் கொண்டிருக்கும் இனிய வீடு. தலைசாய்க்க தாய்மடி காட்டி தெம்பூட்ட தந்தைதோள் கொடுத்து கண்ணீர் துடைத்து கவலை மறக்க கைகொடுத்த என் இனிய வீடு. ஓடு கூட்டில் ஓலமிட்டு ஓடும் மின்விசிறி....! பச்சை சுவருக்குள் பல் விழுந்த டுபுலைட்.....! தெருவில் புதைந்த படிக்கட்டு...! இருளுக்கு மணம்முடிக்கப் பட்ட சிறிய அறை.....! ஆணியில் உயிரை அடகுவைத்த அஜந்தா கடிகாரம்...! கண் இழந்த கண்ணாடி..! என்று இன்றும் பிரமிக்க வைக்கிறது. மழை துளிக்காக மடி காட்டி மதி ஒளிக்காக மேடையிட்டு துயில் எழும் போது துதி பாடி ஓன்றாக கலந்த ஓரவஞ்சனை இல்லாத ஒரு உயிர். பல வர்ணங்களில் பார்வையை பதித்த இந்த பகலவன் இன்று சற்று தலைமறைவாகி தலைசாய்க்கிறான். தன் உடையை மாற்றி நடையெடுக்க தயாராகிறான். பச்சை மணலுக்குள் பதியப்பட்டவன் - இன்று சுட்ட செங்கலுக்குள் சுடராகிறான். தாவாணிக்குள் தள்ளாடியவன் - இன்று முழு...

பொங்கலாய் பொங்குவோம் புதுபொலிவுடன்........!

Image
கருப்பு உடம்பில் தழும்பு தாங்கி தலை நிமிர்ந்த கரும்பாய்  இனிப்போம். கோபுரத்தின் உச்சியில் கொடியசைக்கும் நெற்பயிறாய்  சிரிப்போம்.   கதிரவனின் கண்ணசைவில்  கண்விழிக்கும் மண்பானையின் மடியில் தவிழும் பொங்கலாய் பொங்குவோம் புதுபொலிவுடன்........! வண்ணக் கோலங்கள் நம்  எண்ணக் கதவுகளை தாழ் திறவட்டும்.   இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

புலரும் புத்தாண்டு..... 2012

Image
புலரும் புத்தாண்டு.....   தெருவோர சோடியம் விளக்கருகில் சோடிக் கிளிகளின் கண்ணில் மின்னித் தெரிக்கும் வான வேடிக்கையாய் தூரலில் நனைந்து தலையாட்டி தாலாட்டும் பச்சை இலையின் நரம்பில் நகரும் நதியோட்டமாய் ஒரே கூட்டுக்குள் சீருடை அணிந்து சிரிக்கும் எறும்புடன் ஒட்டிக்கொள்ளும் சிறு துளி இனிப்பாய் இருக்கட்டும். அன்பு அவனியை ஆளட்டும். நினைத்த எண்ணங்கள் நிறைவேறட்டும். இறையருள் நம்மை வளப்படுத்தட்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள்....