Posts

ஒதுங்கி கொண்டு வாழ்த்தும் உளியாய் நீர்...

Image
மெய்யெழுத்துக்களின் மெல்லினமே...! எனக்கான ஆயுத எழுத்தே...! காற்றோடு கலக்கும் என் மூச்சுக் காற்று இனிக்கிறது... உள் நாக்கோடு உரையாடும் உமிழ்நீர் ஊக்கமடைகிறது... பாசம் கொண்டவருக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லும் போது. அன்னை முகமாய் உம் முகம் பார்க்கிறேன் அவனியில் மிஞ்சும் வரை. நான் ஒதுங்கிய திண்ணையாய் உம் மடி சாய்கிறேன் உள்ளம் துள்ளும் வரை. செதுக்கி விட்ட சிற்பமாய்  இன்று நான்... ஒதுங்கி கொண்டு வாழ்த்தும் உளியாய் நீர்... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்னவரே .....

திருமணத் திருவிழா...புது மனம் புகுவிழா...

Image
திருமணத் திருவிழா...புது மனம் புகுவிழா...            

சித்திரையில் வரைந்த சித்திரமே...பார்த்த கண்களுக்கு விசித்திரமே...

Image
சித்திரையில் வரைந்த சித்திரமே...பார்த்த கண்களுக்கு விசித்திரமே... மல்லிகையை...மணம் மாறா மனம் கொண்ட சதிபதியே...  பைந்தமிழில் சொல்லெடுத்து நாலடியில் நடையெடுத்து முத்தமிழால் முத்தமிட்டு இருகரம் பிடிக்கும் இருவருக்கு ஓரு மனதார வாழ்த்துக்கள் திருமண வாழ்த்துக்கள். வரிசையாய் வாகனம் நீண்ட பயணம் ஆச்சரியமான ஆலயம் அழகான திருமணம். இனிப்பான உணவு புதுமையான அனுபவம் பதியதொரு அத்தியாயம் அத்தியாத்தில் ஓர் அதிசயம். வாடாத பூக்கள் இரண்டு வானவில்லின் வர்ணத்தில் வலம் வந்தது. மூடாத சிப்பி ஒன்று அழகான முத்து ஒன்றை அசைந்தாடி சுமந்து வந்தது. பூங்காற்று புல்லாங்குழலுடன் கைகோர்த்து பது நடைபோட்டதைக் கண்டு ஒரே இடத்தில் நின்று பறக்கும் தட்டாம் பூச்சியாய் மனம் மயங்கி நின்றது. குறையாத கல்வி நிறைவான அறிவு நீண்ட ஆயுள் வற்றாத ஆற்றல் வளமையான இளமை தொலையாத துணிவு முழுமையான பெருமை அதிகமான பொன் அளவான பொருள் அதிராத புகழ் திரளான நிலம் பெயர் சொல்லும் நன்மக்கள் கல்லமில்லா நம்பிக்கை நொடிபொழுதிலும் நோயின்மை அடங்காத முயற்சி அணையாத வெற்றி என தமிழ் கூறும் பதினாறு பெற்று வாழ சி...

Veeravilaicolony X-MAS Function.avi

Image

Veeravilaicolony X-MAS function - Night Function

Image

இன்னும் ஒருமுறை உம் மகனாக...

Image
பதிவிற்கு தரம் கொடுக்கவும்..... http://tamilnanbargal.com/tamil-kavithaigal/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95 அனலே..அழகே..முக்கனியே..முழு முதல் தலைவியே..   பூங்குருத்தே..புது தேரே..ஆழ்கடல் முத்தே..என் உயிர் சொத்தே.. அழும் போது அணைத்து விழும் போது தாங்கி சிரிக்கும் போது மகிழ்ந்து சிறப்படைய செய்த வான் முகிலே... சிந்தையில் உன்னை நிறுத்தி விந்தையில் வியக்கிறேன்.. உன் மகனாய் நான் ஆனதால்... இன்னும் ஒருமுறை உம் மகனாக... பள்ளி முடிந்தவுடன் பையை தூக்க... விடியுமுன் சமைத்து கல்லூரி வழியனுப்ப... தொலைகாட்சி முன்பு எனக்கு சோறூட்ட... அடம்பிடிக்கும் போது குளிப்பாட்ட.. முந்தானையால் தலை துடைக்க... சொல்லாமல் போகும் போது தெருவெங்கும் தேட.. மதிப்பெண் குறையும் போது திட்ட.. பண்டிகை காலங்களில் துணியெடுக்க... நெற்றியில் முத்தமிட்டு நெடு பயணத்திற்கு வழியனுப்ப... என் தொலைபேசி அழைப்புக்காக காத்திருக்க... ...

மாமனை மகிழ்விக்க வந்த மா மழையே வா..!

Image
  God has blessed my sister with a baby girl.. பஞ்சு கால்களால் எங்கள் நெஞ்சுக்குள் மஞ்சம் கொண்ட மங்கள தேவதையே வா..! மே தினத்தில் சிறகடித்த செருந்தி மலரே வா..! அழுகையில் ஆனந்தத்தை தந்த அதிசய நிலவே வா..! பூ மடலுக்குள் புண்ணகையை தாங்கிய பூங்காவனமே வா..! மாமனை மகிழ்விக்க வந்த மா மழையே வா..!