புத்தக விமர்சனம்

'காற்றாடிமலைக் கடிதங்கள்' புத்தகத்திற்கு விமர்சனம் வழங்கிய என் நண்பர் பாசிஸ்ட் என்ற ஜெய்கருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். Source/thanks : http://mathamozhithidu.blogspot.com/2011/08/blog-post.html மத துவேஷம் செய்கிறான் - நீலகண்ட பிள்ளை! மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த வாரம், "காற்றாடிமலைக் கடிதங்கள்" என்ற புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. புத்தக ஆசிரியர் " கானகத்துக் கவிக்குயில் " திரு.வெனிஸ் அவர்கள் எனது மதிப்பிற்கும், அன்பிற்கும் உரிய நண்பர் என்பதால் சற்றே ஆர்வமாக வாசிக்க ஆரம்பித்தேன். ஒரே மூச்சில் வாசித்து முடித்த பின்பு ஒரு விமர்சனக் கட்டுரை எழுதினாலென்ன? என்று மனதில் தோன்றியது. ஆனால், தான் ஒரு இறை மறுப்பாளனாக இருந்துக்கொண்டு இறை நம்பிக்கைக்கு உரமிடும் ஒரு புத்தகத்தை படித்து அதற்கு விமர்சனம் எழுத வேண்டுமென்றால் எப்படி எழுதுவது! முதல் பக்கத்திலிருந்து இறுதி பக்கம் வரை மூட்டை மூட்டையாக பொய்யும் புனைவும் இருக்கும் ஒரு ஆன்மீகப் புத்தகத்திற்கு கண்டிப்பாக என்னால் திட்டி தான் எழுத முடியும். இன்று பொதுவெளியில் மதங்கள் கேள்விக்குள்ளாக...