Posts

Showing posts from 2011

புலரும் புத்தாண்டு..... 2012

Image
புலரும் புத்தாண்டு.....   தெருவோர சோடியம் விளக்கருகில் சோடிக் கிளிகளின் கண்ணில் மின்னித் தெரிக்கும் வான வேடிக்கையாய் தூரலில் நனைந்து தலையாட்டி தாலாட்டும் பச்சை இலையின் நரம்பில் நகரும் நதியோட்டமாய் ஒரே கூட்டுக்குள் சீருடை அணிந்து சிரிக்கும் எறும்புடன் ஒட்டிக்கொள்ளும் சிறு துளி இனிப்பாய் இருக்கட்டும். அன்பு அவனியை ஆளட்டும். நினைத்த எண்ணங்கள் நிறைவேறட்டும். இறையருள் நம்மை வளப்படுத்தட்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள்....

இனிய கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்து​க்கள்.

Image

இந்த பக்கத்தில் கிறுக்கியவர்கள்.

Image
நெஞ்சிக்கினியவர்களே...! என் பாதையில் பயணப்பட்டு எனக்குள் பாதிப்பை ஏற்படுத்தியவர்களே இந்த பக்கத்தில் கிறுக்கியவர்கள் . நேரடியாகவோ மறைமுகமாகவோ இவர்களிடம் உள்ள ஏதோ ஒன்று என்னை கவர்ந்திருக்கும். உள்ளத்தில் ஊறியதை உருவகப்படுத்திருக்கிறேன். உறுத்தினால் மன்னிக்கவும். உந்தினால் மகிழவும். நீங்களும் கிறுக்கிருக்கலாம். தொடர்ந்து வாசியுங்கள். கருத்தை பதிவு செய்யுங்கள் .  1. பெஞ்சமின்: கண்ணை மூடி தூங்க முடியாத மீனைப் போல உன்னை விட்டு நீங்கி வாழ முடியாது என்னால். ' கல்லமில்லா ஒரு வெள்ளி நிலா', 'உன் திரு யாழிலென் இறைவா' பாடல்களை கேட்க்கும் போது உன் வாய் அசைவு என் இதைய அசைவு. நடிப்பு, படிப்பு என பல வகையிலும் சிறந்தவன். தனிமைக்கு துணையாக பல நேரங்கள் இருப்பவன். தாய் சொல்லை மறுக்காமல் பக்குவமாக கேட்க்கும் பாங்கு இவனை விட யாரிடமும் இருக்க முடியாது. இவனது நடை கூட யாரையும் காயப்படுத்தாது. வீட்டு அனுமதி இல்லாமல் இவன் கண்கள் எதையும் பார்க்காது. பக்குவமாக பேசி கல்லமில்லாமல் சிரிக்கும் அவன் சிகரம். பல நேரங்களில் என்னுடன் இருந்தவன். இருக்கிறவன். இருப்பவன். நான் கூப்பிட்டால் என் கூட எங்

தமிழ் நண்பர்கள் இணையத்தில் என் கவிதை.

Image
தமிழ் நண்பர்கள் இணையத்தில் என் கவிதை. நன்றி தமிழ் நண்பர்கள். 20-Sep-2011 எங்கள் தெரு... : http://tamilnanbargal.com/tamil-kavithaigal/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81 அன்னை மடி...: http://tamilnanbargal.com/tamil-kavithaigal/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF-0

எங்கள் தெரு...

Image
எங்கள் தெரு... வீரவிளைக்காலனி... கன்னியாக்குமரி மாவட்டத்தில்,      நாக ர்கோவில் நகரத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில், தோவாளை வட்டாரத்தில், பூதப்பாண்டி பஞ்சாயத்திற்குட்பட்ட திட்டுவிளை கிராமத்தில் உள்ள ஒரு தெரு. மூன்று மதங்களால் சூழப்பட்டு, நல் மனத்தவர்களால் ஆளப்பட்டு, தென்னை மரங்களைத் திண்னையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட நைல் நதி. நீண்டு செல்லும் இந்த நைல் நதியின் இருபக்கம் வீடுகளாலும் நடுபக்கம் சிமெண்ட் சாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட பகுதி. கழிவு நீர்க்கால்வாய்களும் இந்த நதியில் கலப்பதுண்டு. திட்டுவிளை கிராமத்திற்கு இத்தெரு பிரசிதிபெற்றது. சிறார்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என எல்லோரும் எப்பொழுதுமே சுறுசுறுப்பாகக் காணப்படும் இடம். ஆற்று நீர் ஆவேசப் பட்டால் கொஞ்சம் ஆத்திரம் தனிய இந்த நதிக்குள் நடனமாடும். பாண்டி விளையாட்டு, நொண்டி விளையாட்டு, கள்ளன் போலீஸ் விளையாட்டு, பல்லாங்குழி, கோலி குண்டு(களச்சி), குச்சியாம் பிள்ளை, ஆடு புலி, கபடி, வாலிபால் என அறியா வயதில் மண் தரையில் உழன்று மல்லுக்கட்டின நாட்கள் தான் எத்தனை. 'பூப்பறிக்க வருகிறோம் வருகிறோம் எந்த மாதத்தில்

புத்தக விமர்சனம்

Image
'காற்றாடிமலைக்  கடிதங்கள்' புத்தகத்திற்கு விமர்சனம் வழங்கிய என் நண்பர் பாசிஸ்ட் என்ற ஜெய்கருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். Source/thanks : http://mathamozhithidu.blogspot.com/2011/08/blog-post.html   மத துவேஷம் செய்கிறான் - நீலகண்ட பிள்ளை! மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த வாரம், "காற்றாடிமலைக் கடிதங்கள்" என்ற புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. புத்தக ஆசிரியர் " கானகத்துக் கவிக்குயில் " திரு.வெனிஸ் அவர்கள் எனது மதிப்பிற்கும், அன்பிற்கும் உரிய நண்பர் என்பதால் சற்றே ஆர்வமாக வாசிக்க ஆரம்பித்தேன். ஒரே மூச்சில் வாசித்து முடித்த பின்பு ஒரு விமர்சனக் கட்டுரை எழுதினாலென்ன? என்று மனதில் தோன்றியது. ஆனால், தான் ஒரு இறை மறுப்பாளனாக இருந்துக்கொண்டு இறை நம்பிக்கைக்கு உரமிடும் ஒரு புத்தகத்தை படித்து அதற்கு விமர்சனம் எழுத வேண்டுமென்றால் எப்படி எழுதுவது! முதல் பக்கத்திலிருந்து இறுதி பக்கம் வரை மூட்டை மூட்டையாக பொய்யும் புனைவும் இருக்கும் ஒரு ஆன்மீகப் புத்தகத்திற்கு கண்டிப்பாக என்னால் திட்டி தான் எழுத முடியும். இன்று பொதுவெளியில் மதங்கள் கேள்விக்குள்ளாக

இரண்டாவது படைப்பு (காற்றாடிமலை கடிதங்கள் - தேவசகாயம்)

Image
இரண்டாவது படைப்பு (காற்றாடிமலை கடிதங்கள் - தேவசகாயம்) Lôt\ô¥UûX, Uû\Nôh£«u UXo TôReLs T§kR CPm Cû\Vôh£«u ®û[¨XUôn E§jR CPm ùUÝÏYoj§LÞm ùU[]m úRÓm CPm FÕTj§LÞm FW±Vf ùNnÙm CPm Tôû\LÞm L®TôÓm CPm YôûRLÞm ALuú\ôÓm CPm £û\LÞm £j§WjûRd LiP CPm Ïû\LÞm £LWjûR AûPkR CPm úRôhPôdLs úRôp®ûV Nk§jR CPm úRôZWôn G§¬LÞm Nk§jR CPm JhÓùUôjRj§p Cû\ F¯V¬u UeLôR UßTdLj§tÏ ûU RkR CPm CjRûLV Lôt\ô¥UûX«p úYhûPVôPlThP Cû\ F¯Vo úRYNLôVm AYoL°u YôrûYÙm, T¦ûVÙm L¥ReLs Y¥®p CkRl ×jRLj§p ®[d¡«Úd¡ú\ôm. L¥Rm, LÚjÕdLû[Ùm, GiQeLû[Ùm GÝjÕ Y¥®p GÓjÕûWdÏm Ko FPLm. SôLÃLm Gu\ ùTV¬p RLYp T¬Uôt\ ùRôPo©Vp Uô±d ùLôiúP CÚkRôÛm CkRd L¥Rj ùRôPo©VÛdÏ UhÓm UdLs Uj§«p JÚ Uô\ôR CPm EiÓ. Hu ¡±jRY Yôr®Ûm, §Ú®®Vj§Ûm CkRd L¥ReLs Ød¡V CPeLû[l ùTß¡u\]. UdL°u Sm©dûLûVÙm, Cû\ ®ÑYôNjûRÙm BZlTÓjRÜm, úTô லி வ ¯TôÓLû[Ùm NPeÏLû[Ùm ®hÓ ®PÜm çV TÜp TpúYß RWl× UdLÞdÏ Ru L¥Rj§u êXm Cû\Yû] ¨û]îhÓ¡\ôo. Cû\ F¯Vo úRYNLôVúUô RkûR ×jRô¬«Pm Ru SiTo ¥X]ô«u L¥Rm êXm A±ØLUô¡ §ÚØÝdÏl ùTt\ôo. Rôu £û\«p CÚdÏ

அவளுடன் நடந்து பார்..........

Image
அவளுடன் நடந்து பார்.......... உலா வரும் தேரில் ஏறி நிலா வரும் நேரம் சிப்பிக்குள் துயில் கொள்ளும் முத்து தப்பித்து தோரணத்தில் தொங்கி கொள்ளும் நேரம் வாடைகாற்றுடன் மல்லாக்கு நிற்கும் மரகீற்றுகளும் மயங்கி வரவேற்கும் நேரம் குட்டைபாவாடையில் திட்டையை திணரவைக்கும் என்னவள் விழிக்கும் அந்த நேரம். வார்த்தையில் வரும் அவளது வசந்தம் வருடம் முழுவதும் நம்மை அவள் வசப்படுத்தும். மழைச்சாரல் கூட மறைந்து கொள்ளும் இவளது மழலை சாரலைக் கண்டால் பஞ்சாமிர்தமும் பயந்தே தலையாட்டும் இந்த தஞ்சாவூர் பொம்மையின் தலைஅசைவில். பட்டுவர்ண துணியில் பஞ்ச வர்ண புறாவின் பாசமுகம் கோபபட்டவர்களையும் குதுகலப்படுத்தும். கோபப்படும் தென்றல் கூட தனிந்துவிடும் இவளைக் தொட்டால். வல்லாரை கீரைக் கூட இவளிடம் ஞாபக சக்தியை கேக்க வேண்டும். திசைமாறும் பறவைகளும் இசைகரம் விரிக்கும் பூக்களும் இவளிடம் குடியேற இடம் பெயறும். மேலோக அருவி மேகம் கீலோகம் நோக்கி பயணிக்கும் இவளுக்காக. தேனமிர்தமும், பாலமுதமும் இவள் வாய்பட வாடி நிற்கும்.   பார்ப்பவர்களை பாசவலைக்குள் பத்திரபடுத்தும் அவள் இனிமை....! எல்லோருக்கும் பிடிக்கு

நண்பனின் திருமண நாள் நினைவுடன்....

Image
நண்பனின் திருமண நாள் நினைவுடன்....                          இரு மனத்திற்கும் வாழ்த்துக்கள்....... இன்று பூமியில் புதிதாய் பிறந்த பூக்களைக் கொண்டு வாழ்த்துகிறேன். வருடம் பல கடந்து வரங்கள் பல வாங்கி வாழ இந்த நண்பனின் பாசம் கலந்த வாழ்த்துக்கள்! காதல் சமுத்திரத்தை கடந்து சாதித்தவனே...வாழ்த்துக்கள்! ஜோசப் காலனிக்குள் இருந்து ஜோஸ்பினை வெற்றிக் கொண்டவனே...வாழ்த்துக்கள்! திட்டுவிளை பெற்ற தேனமுதே...வாழ்த்துக்கள்! இசை இராகம் காது மடல்களை தாழ் திறந்தது. சொந்தங்களின் சந்தோசம் காலனியை கலகலப்பாக்கியது. தலைவாழை குலை வந்தவரை வரவேற்க தலைமை தாங்கியது. சூரியனின் பக்கத்து வீட்டுகாரன் சீரியல் பல்பும் சிரித்தது. மணமக்கள் உள்ளூர் தொலைகாட்சியில் உலா வந்தனர். வாழ்த்த வருபவர்களும் வந்த வண்ணமாகவே இருந்தனர். ஆயிரம் அல்லிக்குள் இரு தாமரையாய் மணமக்களின் வாகன ஊர்வலம். ஒருபக்க கவிதைக்குள் முதல் வரியாய் தங்கமலர்களின் ஒய்யார தோரணை. புல் தரையில் காலை பனிதுளியாய் காதலர்களின் மலர்ந்த முகம். ஆலயத்திற்குள் அலங்கார அணிவகுப்பு. சுடர் ஏற்றப்பட்ட விளக்காய் இரு மனமும் ஒளிர்ந்தது. சம்மதத்துடன் திரும

தரணியில் உதித்த தங்கமலர்களே...!

Image
தரணியில் உதித்த தங்கமலர்களே...!  பவள ஏட்டில் பொன் எழுத்துக்களால்  என் வைரக் கவிதையால் வாழ்த்துகிறோம். நவரத்தின கூட்டுக்குள் ஈருடல் ஓருயிராய் மணம்பரப்புங்கள். வெள்ளி அருவியென இரு மனமும் ஒரு மனமாய் ஒளி வீசுங்கள். சிப்பிக்குள் முத்தாய் இல்லறத்தில்; இலக்கணம் காணுங்கள். உங்களது..... வாழ்வின் இனிமையை சரித்திரம் கூட விசித்திரம் என சித்தரிக்கட்டும். பாசத்தின் பிணைப்பை பூக்கும் பூக்கள் கூட வாசம் என உணர்த்தட்டும். அன்பின் வலிமையை அவனி கூட அதிசயம் என வியக்கட்டும். அட்சய பாத்திரமாய், மங்கா ஒளிவிளக்காய் மகுடம் சூட, நட்சத்திர பந்தலில் தோரணம் கட்டி வட்ட நிலவில் பொட்டு செய்து ஒய்யாரக் கதிரோனை தீபமாய் ஏற்றி விரிந்த வானமுமாய் பரந்த மனதுடன் வாழ்த்துகிறோம்...

Nice CSE ‘A’ Batch 2007– Get together - கால் தடங்களின் நினைவுகளில் - 3

Image
கால் தடங்களின் நினைவுகளில்...... ஓவ்வொருவராக பேச ஆரம்பித்தோம்.வார்த்தைகளை வாடைக்காற்றுடன் பரக்கவிட்டோம். பணியிடங்கள், தங்கும் இடங்கள் பற்றிய அனுபவத்தை அள்ளிவிசினோம். நெடுநாள் சந்திக்காமல் சரிந்துக் கிடந்த நினைவுகள் சில நேரங்களில் சங்கமிக்கத் தொடங்கின. மழைமேகத்தில் தோகைவிரித்து கொண்டாடும் மயில் கூட்டம் போல் எங்களின் காலை பொழுது நிகழ்வுகள் கடந்தன. முதிய உணவு அடுத்த அறையில். ஆறை கண்காணிப்பாளர்கள் செய்து வைத்திருந்த அந்த அலங்கார உணவு உபசரிப்புக் கூடம் எங்களை அப்படியே மடக்கிப் போட்டது. பார்வையிலே பசியை தீர்த்த பெருமை அந்த அறைக்கு இருந்தது. அற்புத ஒளி வெளிச்சத்தில், அளவான சத்தத்தில், அகலமான அறையில் அனைவரும் மதிய உணவை உண்டோம். காலம் கடந்தாலும் இப்படி ஒரு நிகழ்வு கிடைக்குமா? கண்டங்களைத் தாண்டி கடைமைகளை செய்தாலும் இந்த குயில்களின் கூட்டுக்குள் இடம் கிடைக்குமா? ஆயிரம் கணக்கில் அள்ளிப் போட்டாலும் இந்த சந்திப்புக்கு ஈடாகுமா? என்ற சந்தோசம் கண்களுக்குள் இருந்த ஈரத்தை கொஞ்சம் வெளியேக் கொண்டு வந்தன. கடல்கள் சங்கமித்து அலைகளை எழுப்பி, அலைகளின் மேலே நின்று நிலவை பிடித்து, மகுடம் சூட்டுவது போல்

Nice CSE ‘A’ Batch 2007– Get together - கால் தடங்களின் நினைவுகளில் - 2

Image
கால் தடங்களின் நினைவுகளில்...... சென்னையா? பெங்களூரா? திருவனந்தபுரமா? சந்திப்புக்கான இடம் எது? நாள் எது? எண்ணங்களை காற்றுவாக்கில் பரக்கவிட்டு காத்திருந்தோம். ஆதிகமானவர்கள் சென்னையில் இருந்ததாலும், திருவனந்தபுர நண்பர்கள் சென்னைக்கு வர சம்மதித்ததாலும், பெங்களூர் நண்பர்களை சென்னைக்கு அழைப்பது சுலபமாயிற்று. நாட்களை எண்ணினோம். விடுமுறையாகவும், அனைவருக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக 28-03-2009 நாளை தேர்ந்தெடுத்தோம். சென்னையில் எங்கே வைத்து நடத்துவது எளிது? என்று தீவிர விசாரித்து சூழ்நிலையையும், நேரத்தையும், உணவையும், இடத்தையும் கருத்தில் கொண்டு இறுதியாக கோயம்பேடு மார்க்கெட்டின் அருகில் உள்ள கோட்டல் ராயல் பிளாசாவை தேர்வு செய்தோம். எனது வெகுதூர நண்பர்கள் அன்று அதிகாலையிலே எனது அறைக்கு வந்துவிட்டார்கள். ஆனால் நான் எதிர்பார்த்த எனக்கு உற்சாகமூட்டிய நண்பனை மட்டும் காணவில்லை. ஒரே வரிசையில் அமர்ந்து, ஒன்று போல் ஓரங்கட்டப்பட்டு, எனது கவிதை கல்லூரி மேகஸினில் வருவதற்கு உந்துதலாக இருந்த என் உள்ளுக்குள் உலாவந்த நிலாவை காணவில்லை. பல வகையிலும் என் பண்புக்கு பாத்திரமான என்னவனைக் காணவில

மூன்றாவது படைப்பு (தேவசகாயம்)

Image

Nice CSE ‘A’ Batch 2007– Get together - கால் தடங்களின் நினைவுகளில்......

Image
கால் தடங்களின் நினைவுகளில்...... டேய்!.. அவன் வருவானா? இவள் வருவாளா? யாரெல்லாம் வருவார்கள் எனக் கேட்டுக் கொண்டே எங்களது கல்லூரி நண்பர்களின் முதலாமாண்டு சந்திப்புக்கான ஆயத்தம் தொடங்கியது. மின்னஞ்சலில் ஓட்டு நடத்தி கருத்துக்கணிப்புக் கேட்கப்பட்டது. கருத்துக் கணிப்பில் பெருமளவு வாக்கு பதிவாகாவிட்டாலும் ஆயிரம் நட்சத்திரத்திற்குள் ஒரு நிலவாய் எங்கேயோ சில முகங்களின் முகவரிகள் தெரிவதை உணர முடிந்தது. ஏன் இந்தியாவின் பல வாக்கு சாவடிகள் வெறுச்சோடிக் கிடக்கும் போது, கடற் மணலுக்குள் கால் புதைந்தது போல ஆங்காங்கே தொலைவில் வேலையில் இருந்துக் கொண்டு மின்னஞ்சலில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய இயலவில்லை என்று நினைக்கும் போது ஆறுதல் தான். சாத்தியப்படுமா? சந்திப்பு நிகழுமா? என்றக் கேள்விக் கணைகள் மனக்கோட்டையை தகர்ப்பதை தடுக்க முடியவில்லை. உளி இறங்கிய சிலையாய் மாறுமா? அல்லது வெடி இறங்கிய பாறையாய் சிதறுமா? என்ற சிந்தனை ஓட்டம் இதய அணைகளைத் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது. தொலைபேசி அலைக்குள் எங்களது சந்திப்பின் வரவேற்பு அட்டையை அனுப்பினோம். இலக்கை அடைந்த இணைப்புகள் பயனை தந்தன. பாதிலே பழுதடைந்த இணைப்புகள்

'மீண்டும்'

Image
 'மீண்டும்' கல்லறைக்காக இடம் கேட்கிறேன் தாயே – மீண்டும் உன் கருவறையை

இல்லை – ஆனால்

Image
இல்லை – ஆனால் இல்லை.. கார்முகிலோடு கைக்கோர்த்து நடந்ததில்லை வீசும் தென்றலோடு தென்மாங்கு பாடி ஆடியதில்லை பாடித் திரியும் பறவைகளுடன் பாசாங்கும் செய்யவில்லை நிலவுடன் நிதானமாக நின்றதுமில்லை மதியுடன் மகிழ்ந்து விளையாடியதுமில்லை இயற்க்கையுடன் இன்பம் களிக்கவும் இல்லை ஆனால்.. நல்ல உள்ளங்களோடு கைக்கோர்த்து நடந்திருக்கிறேன் வாசம் வீசும் கலையரங்குகளில் தென்மாங்கு பாடி ஆடியிருக்கிறேன் பாசப் பறவைகளுடன் பல அரங்கேற்றங்களை செய்திருக்கிறேன் நட்புடன் நிதானமாக இருந்திருக்கிறேன் மழலையருடன் மகிழ்ந்து விளையாடியிருக்கிறேன் எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனுக்காக – துன்பத்திலும் இன்பத்தை கண்டிருக்கிறேன்..... களித்திருக்கிறேன்!

மடி

Image
மடி துன்பம் போக்கி இன்பம் தந்த இனிய மடி சோர்வை போக்கி தெம்பை தந்த தெளிந்த மடி மடமை போக்கி அறிவை தந்த அன்பு மடி பயம் போக்கி துணிவை தந்த தூய மடி சோகம் போக்கி மகிழ்வை தந்த மலர்ந்த மடி தோல்வி போக்கி வெற்றி தந்த வெள்ளை மடி அதுதான் - என் தாயின் மடி!

'காதலி'

Image
'காதலி' மூன்றெழுத்து 'சொந்தக்காரி' சூழ்ச்சி மிக்க 'சூனியக்காரி' வம்புக்கு வரும் 'சண்டைக்காரி' ஆட்டிபடைக்க நினைக்கும் 'மந்திரவாதி' எனக்கு பிடிக்காத 'அரசியல்வாதி' உறவை முறிக்கும் 'சுயநலவாதி'  அவள்தான் கண்டவர்களுக்கு பிடிக்கும் 'காதலி'

எனக்கு பிடித்தவர்! மாபெரும் வழிகாட்டி!

Image
எனக்கு பிடித்தவர்! மாபெரும் வழிகாட்டி! எனக்கு பிடித்தவர்! என்னை பிடித்தவர்! சமுதாயப் படிக்கட்டில் கால் ஊன்ற சொல்லிக் கொடுத்தவர்.... வாழும் சூழ்நிலையில் மனிதர்களின் உணர்வை புரிந்துக் கொள்ள வழிக்காட்டியவர்... வாழ்வின் சுக துக்கங்களை அனுபவிக்க என்னை அழைத்து சென்றவர்... நவீனக் கால சூழலுக்கு ஏற்றார் போல் என்னை அழகுபடுத்தி மகிழ்ந்தவர்... இருண்ட நெஞ்சத்தில் புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தி ஒளியூட்டியவர்... பகைமை குணத்தை அகற்ற புதிய பாதையைக் காட்டியவர்... தன்னோடு உறவாட, உறையாட எனக்கும் அனுமதி அளித்தவர்... என் கருத்துக்கும் சிந்தனைக்கும் அடித்தளமிட்டவர்.... சிந்தனையை சீர்துக்கி பார்க்க தூண்டியவர்... வாழ்க்கை பாதையை தேர்வு செய்ய உதவிய உத்தமர்... மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ அவர் என் மாபெரும் வழிகாட்டி! எனக்கு பிடித்தவர்!

என் நண்பன்!

Image
என் நண்பன்! என்னை விட பிறரை தாக்குவதில் வலிமையானவன்! என்னோடு என் அறையில் காலம் தாழ்த்தாமல் வருபவன்! தங்குபவன்! கடமையின் மறுபெயரோ அவன் - தெரியவில்லை இருந்தாலும் என்னிடம் அவன் செய்யவந்த கடமையை சரியாக செய்துமுடிப்பவன்! வாழ்க்கையின் வட்டத்தை சுற்றி தளர்ந்து நான் சோர்வுறும் நிலையில் விடாமுயற்சியின் எடுத்துக்காட்டாய் திகழ்பவன்! மனம் சோர்வுற்று கண் அயர்ந்து தூங்கும்போது அதட்டலான அடியால் என்னை எழுப்பியவன்! வலிமையான வலியை உடலில் ஏற்படுத்தி மனதின் வலிமையை சோதிப்பவன்! நான் பிறறோடு பேசுவது கூட அவனுக்கு பிடிக்காதோ என்னவோ உடனே என்னை தன்பக்கம் இழுத்துக் கொள்பவன்! என்னோடு ஒன்றாக இருந்து என் இரத்தத்தோடுக் கலந்தவன் ஏனென்றால் அவன் வாழ்வதற்காக என் இரத்தத்தையும் கொடுத்தவன்! அதட்டலான அடியும், வலிமையான வலியும் கொடுத்தாலும் கூட என்னை விட்டு நீங்காதிருப்பவன்! நான் கேட்டால் உயிரையும் கூட தருபவன்! பணத்தாலும் கூட அவனை என்னிடமிருந்து பிரிக்க முடியாது! அவன் என்னை விட என் உடம்பில் அதிக சுதந்திரத்தை எடுத்துக் கொள்பவன் ! என் உடல் நலம் அவன் கையில்! என்னை விட பிறரை தாக்குவதி

வெறுக்கிறேன் - உனக்காக !

Image
வெறுக்கிறேன் - உனக்காக ! அம்மா ! நீ பொட்டு வைக்க முடியாது என்பதால்    உன் மொட்டு போன்ற நெற்றிக்காக – அந்த   பொட்டையும் கூட வெறுக்கிறேன் - உனக்காக ! அம்மா !                 நீ பூச்சூட முடியாது என்பதால்                உன் பூ போன்ற முகத்திற்காக – அந்த                பூவையும் கூட வெறுக்கிறேன் - உனக்காக ! அம்மா !                  நீ பட்டாடைகள் உடுத்த முடியாது என்பதால்                 உன் கனிந்த உள்ளத்திற்காக – அந்த                 பட்டாடைகளையும் கூட வெறுக்கிறேன் - உனக்காக ! அம்மா !                 கெட்ட சகுணமாக உன்னை                 பார்க்க ஆரம்பித்ததற்காக                இந்த உலகத்தையும் கூட                வெறுக்கிறேன் - உனக்காக !                                                 எல்லாம்                   தாயே - உனக்காக !

எங்கள் ஆசிரியரே..!

Image
எங்கள் ஆசிரியரே..! மனக்கோட்டையின் தெய்வமே...!                  மாற்றத்தின் வழித்தடமே...! வாழ்த்துக்கள் கூற எங்கள் உதடுகள் முற்படும் போது எங்கள் மன வார்த்தைகள் எழுத்து வடிவில் ஏனோ நான்தான் என்று முந்திக் கொள்கிறது. எழுத்தறிவித்த உங்களுக்கு எங்கள் நன்றி கலந்த வணக்கங்கள்....! வறண்ட வகுப்பறையில் எங்களுக்கு வசந்தம் நீங்கள்! இருண்ட இதயங்களுக்கு புத்துணர்வு தந்த பூபாளம் நீங்கள்!         Ice Cream – Mf> Sweet – Mf> வாழ்த்து அட்டையாக,           அரட்டையாக, நகைச்சுவையாக, பாடமாக பழகிய பாதையில்           வீசிய வசந்தம் நீங்கள்.           ஆசிரியர் என்ற ஆணவம் அறவே இல்லாமல்           அமைதியாக வலம் வந்தவர்கள். உடனிருந்த உருவமில்லா ஒளியே! எங்கள் விழியே!             உன்னிலும்  கற்றோம்!            உன்னையும் ஆசிரியராகப் பெற்றோம்!            உன்னையும் வாழ்வில் பிரதிபலிப்போம்!           தொடர்ந்து வீசட்டும் உம்முடைய பூங்காற்று            அது மணம் பரப்பட்டும் எமை பார்த்து...... எங்கள் மனக்கோட்டையில் உங்களுக்கும் ஒருக் கோவில் அதில் பிறக்கும் உம் நினைவுகள் எங்கள் வாழ்வின்

சொர்க்கத்தின் திறப்பு விழா........

Image
சொர்க்கத்தின் திறப்பு விழா........ சொர்க்கமே என்றாலும் அது CSC போல வருமா? CSC என்றாலே அதில் 'A' Section Gilli தானம்மா.. பல தேசம் கொண்ட பாசக்கிளிகள் இங்கு தான் பறந்ததம்மா...                                       I பெஞ்சி மேல ஏறி சாக்பீஸ் எறி வாங்கி வந்த ஒரு காலமல்லவா!... friendship day- ன்னு சொல்லி சாயத்ததான் பூசி நொந்த ஒரு நிகழ்வல்லவா!..... H.O.D- அ பார்த்து அப்பாலஜி எழுதி என்ன ஒரு ஆட்டம் பாட்டம் டா.. 8 பேரு Placed டு 10 பேரு waste டு என்ன ஒரு combination டா..... அட டூரு என்ன டூரு அதில் 3rd year ஜோரு Final Year பாரு – அட போகலத்தான் கேளு யார கேட்க எல்லாமே முடிஞ்சி.

வருடத்தின் வசந்த விழா.....

Image
என் அன்பு நெஞ்சங்களே...! வருகின்ற வருடத்திற்கு வரவேற்பு வழங்கி உங்களுக்கு வாழ்த்துக்கள் கூறுகிறேன். இனிய புத்தாண்டு புது வாழ்த்துக்கள்..! சென்ற நாட்களெல்லாம் செழிப்பாய் சிறந்தது போல்வருகின்ற நாட்களும் வளமையாய் வளர வாழ்த்துக்கள்.         வெள்ளங்களின் வெண்மையாய் - இன்பம்        இல்லங்களில் இணைந்திருக்கட்டும்.        மல்லிகையின் மணமாய் - மகிழ்ச்சி        மன வானில் மணம் பரப்பட்டும். சிரிப்பொலிகள் எங்கும் சிலம்பொலிகள் போல் சிதறட்டும். நீர்வீழ்ச்சியில் துள்ளித்தெரிக்கும் நீர்த் துளிகள் போல் பாசம் பகிர்வினில் பகைமையை உடைத்தெரிக்கட்டும்.  புன்முறுவலில் இன்னுயிர்கள் இணையட்டும்.        அன்புறவில் ஆயுள் கூடட்டும்.        தேடல்கள் நிறைவேறட்டும், ஊடல்கள் உருமாறட்டும்.        உதிர்ந்த மனங்கள் துளிர்க்கட்டும், ஏக்கங்கள் இடம் மாறட்டும்.                                                                   வருடத்தின் வசந்த விழா.....                                  விழி எங்கும் நடக்கட்டும்