Posts

Showing posts from March, 2011

'காதலி'

Image
'காதலி' மூன்றெழுத்து 'சொந்தக்காரி' சூழ்ச்சி மிக்க 'சூனியக்காரி' வம்புக்கு வரும் 'சண்டைக்காரி' ஆட்டிபடைக்க நினைக்கும் 'மந்திரவாதி' எனக்கு பிடிக்காத 'அரசியல்வாதி' உறவை முறிக்கும் 'சுயநலவாதி'  அவள்தான் கண்டவர்களுக்கு பிடிக்கும் 'காதலி'

எனக்கு பிடித்தவர்! மாபெரும் வழிகாட்டி!

Image
எனக்கு பிடித்தவர்! மாபெரும் வழிகாட்டி! எனக்கு பிடித்தவர்! என்னை பிடித்தவர்! சமுதாயப் படிக்கட்டில் கால் ஊன்ற சொல்லிக் கொடுத்தவர்.... வாழும் சூழ்நிலையில் மனிதர்களின் உணர்வை புரிந்துக் கொள்ள வழிக்காட்டியவர்... வாழ்வின் சுக துக்கங்களை அனுபவிக்க என்னை அழைத்து சென்றவர்... நவீனக் கால சூழலுக்கு ஏற்றார் போல் என்னை அழகுபடுத்தி மகிழ்ந்தவர்... இருண்ட நெஞ்சத்தில் புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தி ஒளியூட்டியவர்... பகைமை குணத்தை அகற்ற புதிய பாதையைக் காட்டியவர்... தன்னோடு உறவாட, உறையாட எனக்கும் அனுமதி அளித்தவர்... என் கருத்துக்கும் சிந்தனைக்கும் அடித்தளமிட்டவர்.... சிந்தனையை சீர்துக்கி பார்க்க தூண்டியவர்... வாழ்க்கை பாதையை தேர்வு செய்ய உதவிய உத்தமர்... மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ அவர் என் மாபெரும் வழிகாட்டி! எனக்கு பிடித்தவர்!

என் நண்பன்!

Image
என் நண்பன்! என்னை விட பிறரை தாக்குவதில் வலிமையானவன்! என்னோடு என் அறையில் காலம் தாழ்த்தாமல் வருபவன்! தங்குபவன்! கடமையின் மறுபெயரோ அவன் - தெரியவில்லை இருந்தாலும் என்னிடம் அவன் செய்யவந்த கடமையை சரியாக செய்துமுடிப்பவன்! வாழ்க்கையின் வட்டத்தை சுற்றி தளர்ந்து நான் சோர்வுறும் நிலையில் விடாமுயற்சியின் எடுத்துக்காட்டாய் திகழ்பவன்! மனம் சோர்வுற்று கண் அயர்ந்து தூங்கும்போது அதட்டலான அடியால் என்னை எழுப்பியவன்! வலிமையான வலியை உடலில் ஏற்படுத்தி மனதின் வலிமையை சோதிப்பவன்! நான் பிறறோடு பேசுவது கூட அவனுக்கு பிடிக்காதோ என்னவோ உடனே என்னை தன்பக்கம் இழுத்துக் கொள்பவன்! என்னோடு ஒன்றாக இருந்து என் இரத்தத்தோடுக் கலந்தவன் ஏனென்றால் அவன் வாழ்வதற்காக என் இரத்தத்தையும் கொடுத்தவன்! அதட்டலான அடியும், வலிமையான வலியும் கொடுத்தாலும் கூட என்னை விட்டு நீங்காதிருப்பவன்! நான் கேட்டால் உயிரையும் கூட தருபவன்! பணத்தாலும் கூட அவனை என்னிடமிருந்து பிரிக்க முடியாது! அவன் என்னை விட என் உடம்பில் அதிக சுதந்திரத்தை எடுத்துக் கொள்பவன் ! என் உடல் நலம் அவன் கையில்! என்னை விட பிறரை தாக்குவதி