Posts

Showing posts from July, 2011

அவளுடன் நடந்து பார்..........

Image
அவளுடன் நடந்து பார்.......... உலா வரும் தேரில் ஏறி நிலா வரும் நேரம் சிப்பிக்குள் துயில் கொள்ளும் முத்து தப்பித்து தோரணத்தில் தொங்கி கொள்ளும் நேரம் வாடைகாற்றுடன் மல்லாக்கு நிற்கும் மரகீற்றுகளும் மயங்கி வரவேற்கும் நேரம் குட்டைபாவாடையில் திட்டையை திணரவைக்கும் என்னவள் விழிக்கும் அந்த நேரம். வார்த்தையில் வரும் அவளது வசந்தம் வருடம் முழுவதும் நம்மை அவள் வசப்படுத்தும். மழைச்சாரல் கூட மறைந்து கொள்ளும் இவளது மழலை சாரலைக் கண்டால் பஞ்சாமிர்தமும் பயந்தே தலையாட்டும் இந்த தஞ்சாவூர் பொம்மையின் தலைஅசைவில். பட்டுவர்ண துணியில் பஞ்ச வர்ண புறாவின் பாசமுகம் கோபபட்டவர்களையும் குதுகலப்படுத்தும். கோபப்படும் தென்றல் கூட தனிந்துவிடும் இவளைக் தொட்டால். வல்லாரை கீரைக் கூட இவளிடம் ஞாபக சக்தியை கேக்க வேண்டும். திசைமாறும் பறவைகளும் இசைகரம் விரிக்கும் பூக்களும் இவளிடம் குடியேற இடம் பெயறும். மேலோக அருவி மேகம் கீலோகம் நோக்கி பயணிக்கும் இவளுக்காக. தேனமிர்தமும், பாலமுதமும் இவள் வாய்பட வாடி நிற்கும்.   பார்ப்பவர்களை பாசவலைக்குள் பத்திரபடுத்தும் அவள் இனிமை....! எல்லோருக்கும் பிடிக்கு

நண்பனின் திருமண நாள் நினைவுடன்....

Image
நண்பனின் திருமண நாள் நினைவுடன்....                          இரு மனத்திற்கும் வாழ்த்துக்கள்....... இன்று பூமியில் புதிதாய் பிறந்த பூக்களைக் கொண்டு வாழ்த்துகிறேன். வருடம் பல கடந்து வரங்கள் பல வாங்கி வாழ இந்த நண்பனின் பாசம் கலந்த வாழ்த்துக்கள்! காதல் சமுத்திரத்தை கடந்து சாதித்தவனே...வாழ்த்துக்கள்! ஜோசப் காலனிக்குள் இருந்து ஜோஸ்பினை வெற்றிக் கொண்டவனே...வாழ்த்துக்கள்! திட்டுவிளை பெற்ற தேனமுதே...வாழ்த்துக்கள்! இசை இராகம் காது மடல்களை தாழ் திறந்தது. சொந்தங்களின் சந்தோசம் காலனியை கலகலப்பாக்கியது. தலைவாழை குலை வந்தவரை வரவேற்க தலைமை தாங்கியது. சூரியனின் பக்கத்து வீட்டுகாரன் சீரியல் பல்பும் சிரித்தது. மணமக்கள் உள்ளூர் தொலைகாட்சியில் உலா வந்தனர். வாழ்த்த வருபவர்களும் வந்த வண்ணமாகவே இருந்தனர். ஆயிரம் அல்லிக்குள் இரு தாமரையாய் மணமக்களின் வாகன ஊர்வலம். ஒருபக்க கவிதைக்குள் முதல் வரியாய் தங்கமலர்களின் ஒய்யார தோரணை. புல் தரையில் காலை பனிதுளியாய் காதலர்களின் மலர்ந்த முகம். ஆலயத்திற்குள் அலங்கார அணிவகுப்பு. சுடர் ஏற்றப்பட்ட விளக்காய் இரு மனமும் ஒளிர்ந்தது. சம்மதத்துடன் திரும

தரணியில் உதித்த தங்கமலர்களே...!

Image
தரணியில் உதித்த தங்கமலர்களே...!  பவள ஏட்டில் பொன் எழுத்துக்களால்  என் வைரக் கவிதையால் வாழ்த்துகிறோம். நவரத்தின கூட்டுக்குள் ஈருடல் ஓருயிராய் மணம்பரப்புங்கள். வெள்ளி அருவியென இரு மனமும் ஒரு மனமாய் ஒளி வீசுங்கள். சிப்பிக்குள் முத்தாய் இல்லறத்தில்; இலக்கணம் காணுங்கள். உங்களது..... வாழ்வின் இனிமையை சரித்திரம் கூட விசித்திரம் என சித்தரிக்கட்டும். பாசத்தின் பிணைப்பை பூக்கும் பூக்கள் கூட வாசம் என உணர்த்தட்டும். அன்பின் வலிமையை அவனி கூட அதிசயம் என வியக்கட்டும். அட்சய பாத்திரமாய், மங்கா ஒளிவிளக்காய் மகுடம் சூட, நட்சத்திர பந்தலில் தோரணம் கட்டி வட்ட நிலவில் பொட்டு செய்து ஒய்யாரக் கதிரோனை தீபமாய் ஏற்றி விரிந்த வானமுமாய் பரந்த மனதுடன் வாழ்த்துகிறோம்...