நண்பனின் திருமண நாள் நினைவுடன்....

நண்பனின் திருமண நாள் நினைவுடன்....
                         இரு மனத்திற்கும் வாழ்த்துக்கள்.......


இன்று பூமியில் புதிதாய் பிறந்த
பூக்களைக் கொண்டு வாழ்த்துகிறேன்.
வருடம் பல கடந்து வரங்கள் பல வாங்கி
வாழ இந்த நண்பனின் பாசம் கலந்த
வாழ்த்துக்கள்!


காதல் சமுத்திரத்தை கடந்து சாதித்தவனே...வாழ்த்துக்கள்!
ஜோசப் காலனிக்குள் இருந்து ஜோஸ்பினை வெற்றிக் கொண்டவனே...வாழ்த்துக்கள்!
திட்டுவிளை பெற்ற தேனமுதே...வாழ்த்துக்கள்!


இசை இராகம் காது மடல்களை தாழ் திறந்தது.
சொந்தங்களின் சந்தோசம் காலனியை கலகலப்பாக்கியது.
தலைவாழை குலை வந்தவரை வரவேற்க தலைமை தாங்கியது.
சூரியனின் பக்கத்து வீட்டுகாரன் சீரியல் பல்பும் சிரித்தது.
மணமக்கள் உள்ளூர் தொலைகாட்சியில் உலா வந்தனர்.
வாழ்த்த வருபவர்களும் வந்த வண்ணமாகவே இருந்தனர்.


ஆயிரம் அல்லிக்குள் இரு தாமரையாய்
மணமக்களின் வாகன ஊர்வலம்.
ஒருபக்க கவிதைக்குள் முதல் வரியாய்
தங்கமலர்களின் ஒய்யார தோரணை.
புல் தரையில் காலை பனிதுளியாய்
காதலர்களின் மலர்ந்த முகம்.


ஆலயத்திற்குள் அலங்கார அணிவகுப்பு.

சுடர் ஏற்றப்பட்ட விளக்காய்
இரு மனமும் ஒளிர்ந்தது.
சம்மதத்துடன் திருமண
சடங்குகளும் நிறைவேறியது.
உறவுகள் கூடி பூத்தூவி
பூந்தேரை தேடி ஏற்றி
மணவிழா மேடைக்கு
வழியனுப்பி வைத்தனர்.


பகலில் கதிரவனும், மதியும்
ஒன்றாக கைகோர்த்தது போல,
ஆழ் கடல் முத்தும், வீழ் அருவியின் துளியும்
ஓன்றாக சிரித்தது போல,
படரும் கொடியும் வருடும் தென்றலும்
ஒன்றாக வருவது போல
தம்பதிகள் கம்பீரமாகவே வந்தனர்.


செவ்வாழை தோட்டம் வாழ்த்து பாட
பூவான மின்னல் புதுஒளி வீச
கானகத்து குயில் குரல்இசை முழங்க
என் மன கால்கள் ஆட்டம் போட
இனிதே இன்புற்றேன் அந்த
இனிய நாளில்.
 

கண், காது, மூக்கு என்று உருவம் படைத்து
தங்களை பிரம்மாக்களாக பிரகடனப்படுத்தியவர்கள்
தலை கவிழ்ந்தே தலைமகனை வாழ்த்தினார்கள்.
வாய்க்கு வந்தபடி வசைமொழி பாடியவர்கள்
வயறார விருந்துண்டனர்.


இவர்களின் சாதனை, கதலர்களுக்கு மிக பெரிய போதனை.

கடின உழைப்புக்கு வெற்றி யென்று - இதைக் கூறிவிட முடியாது.
காத்திருந்ததின் கனி யென்றே - இதை நான் கூறுவேன்.


கடலை தேடும் நதிகள் அணைக்குள் அடங்கும்.
பதிலை தேடும் வினாக்கள் மெளனங்களில் சிறைபடும்.
ஆனால்
உறவை தேடிய இவர்களின் உள்ளம்
கருக்கலில் மலரும் மல்லியாய்
மலர்ந்து மணம் வீசட்டும்.
திருமண வாழ்த்துக்கள் ! இரு மனத்திற்கும் வாழ்த்துக்கள் !

Comments

  1. இந்தக் குயில் கானகத்தில் பாடினாலும் இதன் கவியிசை எங்கள் காதுகளில் தேனையல்லவா ஊற்றுகிறது!
    என் திரு'மணம் வாழ்த்திய உன் திரு'மனம் வாழ்க!

    நண்பனே!
    என் திருமணம் இசையச் செய்த நம் இறைமகன் இயேசு, உன் மனம் போல் உன் மணம் அமையச்செய்ய வேண்டுகிறேன்!

    நண்பன்!

    ReplyDelete
  2. உங்கள் பதிவு நன்றாக இருந்தது

    wallpapers tamil actress

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இரண்டாவது படைப்பு (காற்றாடிமலை கடிதங்கள் - தேவசகாயம்)