Posts

Showing posts from April, 2011

Nice CSE ‘A’ Batch 2007– Get together - கால் தடங்களின் நினைவுகளில்......

Image
கால் தடங்களின் நினைவுகளில்...... டேய்!.. அவன் வருவானா? இவள் வருவாளா? யாரெல்லாம் வருவார்கள் எனக் கேட்டுக் கொண்டே எங்களது கல்லூரி நண்பர்களின் முதலாமாண்டு சந்திப்புக்கான ஆயத்தம் தொடங்கியது. மின்னஞ்சலில் ஓட்டு நடத்தி கருத்துக்கணிப்புக் கேட்கப்பட்டது. கருத்துக் கணிப்பில் பெருமளவு வாக்கு பதிவாகாவிட்டாலும் ஆயிரம் நட்சத்திரத்திற்குள் ஒரு நிலவாய் எங்கேயோ சில முகங்களின் முகவரிகள் தெரிவதை உணர முடிந்தது. ஏன் இந்தியாவின் பல வாக்கு சாவடிகள் வெறுச்சோடிக் கிடக்கும் போது, கடற் மணலுக்குள் கால் புதைந்தது போல ஆங்காங்கே தொலைவில் வேலையில் இருந்துக் கொண்டு மின்னஞ்சலில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய இயலவில்லை என்று நினைக்கும் போது ஆறுதல் தான். சாத்தியப்படுமா? சந்திப்பு நிகழுமா? என்றக் கேள்விக் கணைகள் மனக்கோட்டையை தகர்ப்பதை தடுக்க முடியவில்லை. உளி இறங்கிய சிலையாய் மாறுமா? அல்லது வெடி இறங்கிய பாறையாய் சிதறுமா? என்ற சிந்தனை ஓட்டம் இதய அணைகளைத் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது. தொலைபேசி அலைக்குள் எங்களது சந்திப்பின் வரவேற்பு அட்டையை அனுப்பினோம். இலக்கை அடைந்த இணைப்புகள் பயனை தந்தன. பாதிலே பழுதடைந்த இணைப்புகள்

'மீண்டும்'

Image
 'மீண்டும்' கல்லறைக்காக இடம் கேட்கிறேன் தாயே – மீண்டும் உன் கருவறையை

இல்லை – ஆனால்

Image
இல்லை – ஆனால் இல்லை.. கார்முகிலோடு கைக்கோர்த்து நடந்ததில்லை வீசும் தென்றலோடு தென்மாங்கு பாடி ஆடியதில்லை பாடித் திரியும் பறவைகளுடன் பாசாங்கும் செய்யவில்லை நிலவுடன் நிதானமாக நின்றதுமில்லை மதியுடன் மகிழ்ந்து விளையாடியதுமில்லை இயற்க்கையுடன் இன்பம் களிக்கவும் இல்லை ஆனால்.. நல்ல உள்ளங்களோடு கைக்கோர்த்து நடந்திருக்கிறேன் வாசம் வீசும் கலையரங்குகளில் தென்மாங்கு பாடி ஆடியிருக்கிறேன் பாசப் பறவைகளுடன் பல அரங்கேற்றங்களை செய்திருக்கிறேன் நட்புடன் நிதானமாக இருந்திருக்கிறேன் மழலையருடன் மகிழ்ந்து விளையாடியிருக்கிறேன் எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனுக்காக – துன்பத்திலும் இன்பத்தை கண்டிருக்கிறேன்..... களித்திருக்கிறேன்!

மடி

Image
மடி துன்பம் போக்கி இன்பம் தந்த இனிய மடி சோர்வை போக்கி தெம்பை தந்த தெளிந்த மடி மடமை போக்கி அறிவை தந்த அன்பு மடி பயம் போக்கி துணிவை தந்த தூய மடி சோகம் போக்கி மகிழ்வை தந்த மலர்ந்த மடி தோல்வி போக்கி வெற்றி தந்த வெள்ளை மடி அதுதான் - என் தாயின் மடி!