Nice CSE ‘A’ Batch 2007– Get together - கால் தடங்களின் நினைவுகளில்......


கால் தடங்களின் நினைவுகளில்......

டேய்!.. அவன் வருவானா? இவள் வருவாளா? யாரெல்லாம் வருவார்கள் எனக் கேட்டுக் கொண்டே எங்களது கல்லூரி நண்பர்களின் முதலாமாண்டு சந்திப்புக்கான ஆயத்தம் தொடங்கியது.

மின்னஞ்சலில் ஓட்டு நடத்தி கருத்துக்கணிப்புக் கேட்கப்பட்டது. கருத்துக் கணிப்பில் பெருமளவு வாக்கு பதிவாகாவிட்டாலும் ஆயிரம் நட்சத்திரத்திற்குள் ஒரு நிலவாய் எங்கேயோ சில முகங்களின் முகவரிகள் தெரிவதை உணர முடிந்தது. ஏன் இந்தியாவின் பல வாக்கு சாவடிகள் வெறுச்சோடிக் கிடக்கும் போது, கடற் மணலுக்குள் கால் புதைந்தது போல ஆங்காங்கே தொலைவில் வேலையில் இருந்துக் கொண்டு மின்னஞ்சலில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய இயலவில்லை என்று நினைக்கும் போது ஆறுதல் தான்.

சாத்தியப்படுமா? சந்திப்பு நிகழுமா? என்றக் கேள்விக் கணைகள் மனக்கோட்டையை தகர்ப்பதை தடுக்க முடியவில்லை. உளி இறங்கிய சிலையாய் மாறுமா? அல்லது வெடி இறங்கிய பாறையாய் சிதறுமா? என்ற சிந்தனை ஓட்டம் இதய அணைகளைத் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது.
தொலைபேசி அலைக்குள் எங்களது சந்திப்பின் வரவேற்பு அட்டையை அனுப்பினோம். இலக்கை அடைந்த இணைப்புகள் பயனை தந்தன. பாதிலே பழுதடைந்த இணைப்புகள் பயத்தை தந்தன. ஆங்காங்கே இருந்து ஆதரவுக் குரல்களும் எழும்பின. தென் கோடி முதல் வட கோடி வரை இணைத்து விடலாம் என்று குழுவாகத் தொடர்பு கொண்டோம். தொலைந்த முகவரிகளை தேடி அலைந்தோம்.


காலவரையற்று மூடப்பட்டிருந்த எங்கள் குழு மின்னஞ்சல் (yahoo groups) கொஞ்சம் கொஞ்சமாகக் கதவை திறந்தது. உண்ணாவிரதம் இருந்த எங்கள் வார்த்தைகள் பளிங்கு தரையில் பவளமணிகளாய் தாவிக்குதித்தோடியது.
வருபவர்களை எதிர்பார்க்கும் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. அரசியல் வாதிகளின் ஆதரவுக் கூட்டமல்ல, ஆன்மீகவாதிகளின் ஆனந்தக் கூட்டமுமல்ல. நடிகர்களின் ரசிகர் மன்ற விளம்பரமும் அல்ல. வேலையற்றவர்களின் விவாத மேடையும் அல்ல. அது ஒரு வசந்த கால பறவையின் வேடந்தாங்கள். பழைய நினைவுகளை பழுது பார்த்து பறக்க விடும் பாசறை இந்த சந்திப்பு நிகழ்வு.                                                                                                                        

                                                                                                             
   தொடரும்....

Comments

Popular posts from this blog

நண்பனின் திருமண நாள் நினைவுடன்....

இரண்டாவது படைப்பு (காற்றாடிமலை கடிதங்கள் - தேவசகாயம்)