Posts

Showing posts from 2012

Weeding Invitation

Image
Wedding Events "It's impossible" said pride. "It's risky" said experience. "It's pointless" said reason. "Give it a try" whispered the heart...     Wedding Mass    Monday, December 10, 2012 | 9.30 am onwards St. Francis Assisi Church - Mathal, Thittuvilai Mathal Nagercoil, Tamilnadu 629852   Root Map           Wedding Reception   Raja Mahal - Thittuvilai Thuvarankadu Nagercoil, Tamilnadu 629852    Monday, December 10, 2012 | 5.30 pm onwards                       Root Map From nagercoil bus stand Driving directions to Thittuvilai Bus Terminal Bus stop Nagercoil, Tamil Nadu 1. Head towards NH 66 north on Duthie school Rd 24 m 2. Turn right onto NH 66 600 m 3. Turn left onto NH 944 Pass by Peoples Hotel (on the right in 300 m) 900 m 4. Slight right toward SH 45 9.0 km 5. Continue straight onto SH 45 Pass by Subam Hospital (on th

தீபாவளி வாழ்த்துக்கள்

Image
தீபாவளி வாழ்த்துக்கள்.... புல்வெளியில் சிதறி கிடக்கும் வான்வெளி வின்மீன்களாய் - என் கண்விழியில் பரவி கிடக்கும் - இந்த தீபஒளி திருநாளில்...... அகம் மகிழ்ந்து அன்பு பொங்கி முகம் மலர்ந்து தினம் சிரிக்க – என் மனம் திறந்து வாழ்த்துகிறேன் - இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

ஒதுங்கி கொண்டு வாழ்த்தும் உளியாய் நீர்...

Image
மெய்யெழுத்துக்களின் மெல்லினமே...! எனக்கான ஆயுத எழுத்தே...! காற்றோடு கலக்கும் என் மூச்சுக் காற்று இனிக்கிறது... உள் நாக்கோடு உரையாடும் உமிழ்நீர் ஊக்கமடைகிறது... பாசம் கொண்டவருக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லும் போது. அன்னை முகமாய் உம் முகம் பார்க்கிறேன் அவனியில் மிஞ்சும் வரை. நான் ஒதுங்கிய திண்ணையாய் உம் மடி சாய்கிறேன் உள்ளம் துள்ளும் வரை. செதுக்கி விட்ட சிற்பமாய்  இன்று நான்... ஒதுங்கி கொண்டு வாழ்த்தும் உளியாய் நீர்... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்னவரே .....

திருமணத் திருவிழா...புது மனம் புகுவிழா...

Image
திருமணத் திருவிழா...புது மனம் புகுவிழா...            

சித்திரையில் வரைந்த சித்திரமே...பார்த்த கண்களுக்கு விசித்திரமே...

Image
சித்திரையில் வரைந்த சித்திரமே...பார்த்த கண்களுக்கு விசித்திரமே... மல்லிகையை...மணம் மாறா மனம் கொண்ட சதிபதியே...  பைந்தமிழில் சொல்லெடுத்து நாலடியில் நடையெடுத்து முத்தமிழால் முத்தமிட்டு இருகரம் பிடிக்கும் இருவருக்கு ஓரு மனதார வாழ்த்துக்கள் திருமண வாழ்த்துக்கள். வரிசையாய் வாகனம் நீண்ட பயணம் ஆச்சரியமான ஆலயம் அழகான திருமணம். இனிப்பான உணவு புதுமையான அனுபவம் பதியதொரு அத்தியாயம் அத்தியாத்தில் ஓர் அதிசயம். வாடாத பூக்கள் இரண்டு வானவில்லின் வர்ணத்தில் வலம் வந்தது. மூடாத சிப்பி ஒன்று அழகான முத்து ஒன்றை அசைந்தாடி சுமந்து வந்தது. பூங்காற்று புல்லாங்குழலுடன் கைகோர்த்து பது நடைபோட்டதைக் கண்டு ஒரே இடத்தில் நின்று பறக்கும் தட்டாம் பூச்சியாய் மனம் மயங்கி நின்றது. குறையாத கல்வி நிறைவான அறிவு நீண்ட ஆயுள் வற்றாத ஆற்றல் வளமையான இளமை தொலையாத துணிவு முழுமையான பெருமை அதிகமான பொன் அளவான பொருள் அதிராத புகழ் திரளான நிலம் பெயர் சொல்லும் நன்மக்கள் கல்லமில்லா நம்பிக்கை நொடிபொழுதிலும் நோயின்மை அடங்காத முயற்சி அணையாத வெற்றி என தமிழ் கூறும் பதினாறு பெற்று வாழ சித்தி

Veeravilaicolony X-MAS Function.avi

Image

Veeravilaicolony X-MAS function - Night Function

Image

இன்னும் ஒருமுறை உம் மகனாக...

Image
பதிவிற்கு தரம் கொடுக்கவும்..... http://tamilnanbargal.com/tamil-kavithaigal/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95 அனலே..அழகே..முக்கனியே..முழு முதல் தலைவியே..   பூங்குருத்தே..புது தேரே..ஆழ்கடல் முத்தே..என் உயிர் சொத்தே.. அழும் போது அணைத்து விழும் போது தாங்கி சிரிக்கும் போது மகிழ்ந்து சிறப்படைய செய்த வான் முகிலே... சிந்தையில் உன்னை நிறுத்தி விந்தையில் வியக்கிறேன்.. உன் மகனாய் நான் ஆனதால்... இன்னும் ஒருமுறை உம் மகனாக... பள்ளி முடிந்தவுடன் பையை தூக்க... விடியுமுன் சமைத்து கல்லூரி வழியனுப்ப... தொலைகாட்சி முன்பு எனக்கு சோறூட்ட... அடம்பிடிக்கும் போது குளிப்பாட்ட.. முந்தானையால் தலை துடைக்க... சொல்லாமல் போகும் போது தெருவெங்கும் தேட.. மதிப்பெண் குறையும் போது திட்ட.. பண்டிகை காலங்களில் துணியெடுக்க... நெற்றியில் முத்தமிட்டு நெடு பயணத்திற்கு வழியனுப்ப... என் தொலைபேசி அழைப்புக்காக காத்திருக்க... வீட்டுக்க

மாமனை மகிழ்விக்க வந்த மா மழையே வா..!

Image
  God has blessed my sister with a baby girl.. பஞ்சு கால்களால் எங்கள் நெஞ்சுக்குள் மஞ்சம் கொண்ட மங்கள தேவதையே வா..! மே தினத்தில் சிறகடித்த செருந்தி மலரே வா..! அழுகையில் ஆனந்தத்தை தந்த அதிசய நிலவே வா..! பூ மடலுக்குள் புண்ணகையை தாங்கிய பூங்காவனமே வா..! மாமனை மகிழ்விக்க வந்த மா மழையே வா..!

என் இனிய வீடு.

Image
 என் இனிய வீடு. தன் எடையை விட 50 மடங்கு  எடையை தூக்கும் எறும்பை போல தன் தகுதிக்கு மீறி எங்களை சுமந்த என் இனிய வீட்டுக்கு அர்ப்பணம். என் இனிய வீடு. 6 பேர் வாழ்ந்து 5 ஆகி இப்பொழுது 2 பேருடன் இனித்துக் கொண்டிருக்கும் இனிய வீடு. தலைசாய்க்க தாய்மடி காட்டி தெம்பூட்ட தந்தைதோள் கொடுத்து கண்ணீர் துடைத்து கவலை மறக்க கைகொடுத்த என் இனிய வீடு. ஓடு கூட்டில் ஓலமிட்டு ஓடும் மின்விசிறி....! பச்சை சுவருக்குள் பல் விழுந்த டுபுலைட்.....! தெருவில் புதைந்த படிக்கட்டு...! இருளுக்கு மணம்முடிக்கப் பட்ட சிறிய அறை.....! ஆணியில் உயிரை அடகுவைத்த அஜந்தா கடிகாரம்...! கண் இழந்த கண்ணாடி..! என்று இன்றும் பிரமிக்க வைக்கிறது. மழை துளிக்காக மடி காட்டி மதி ஒளிக்காக மேடையிட்டு துயில் எழும் போது துதி பாடி ஓன்றாக கலந்த ஓரவஞ்சனை இல்லாத ஒரு உயிர். பல வர்ணங்களில் பார்வையை பதித்த இந்த பகலவன் இன்று சற்று தலைமறைவாகி தலைசாய்க்கிறான். தன் உடையை மாற்றி நடையெடுக்க தயாராகிறான். பச்சை மணலுக்குள் பதியப்பட்டவன் - இன்று சுட்ட செங்கலுக்குள் சுடராகிறான். தாவாணிக்குள் தள்ளாடியவன் - இன்று முழு சேலைக்கு

பொங்கலாய் பொங்குவோம் புதுபொலிவுடன்........!

Image
கருப்பு உடம்பில் தழும்பு தாங்கி தலை நிமிர்ந்த கரும்பாய்  இனிப்போம். கோபுரத்தின் உச்சியில் கொடியசைக்கும் நெற்பயிறாய்  சிரிப்போம்.   கதிரவனின் கண்ணசைவில்  கண்விழிக்கும் மண்பானையின் மடியில் தவிழும் பொங்கலாய் பொங்குவோம் புதுபொலிவுடன்........! வண்ணக் கோலங்கள் நம்  எண்ணக் கதவுகளை தாழ் திறவட்டும்.   இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.