பொங்கலாய் பொங்குவோம் புதுபொலிவுடன்........!



கருப்பு உடம்பில் தழும்பு தாங்கி
தலை நிமிர்ந்த கரும்பாய் 
இனிப்போம்.

கோபுரத்தின் உச்சியில்
கொடியசைக்கும் நெற்பயிறாய் 
சிரிப்போம். 
கதிரவனின் கண்ணசைவில் 
கண்விழிக்கும் மண்பானையின்
மடியில் தவிழும் பொங்கலாய் பொங்குவோம்
புதுபொலிவுடன்........!

வண்ணக் கோலங்கள் நம் 
எண்ணக் கதவுகளை தாழ் திறவட்டும்.
 

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


Comments

  1. I did not understand till you explained it to me.... It is simply suberbbb.....
    Try to convey the same in ENGLISH so that I can appreciate every single day...

    Kudoz to vency

    Anita

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனின் திருமண நாள் நினைவுடன்....

இரண்டாவது படைப்பு (காற்றாடிமலை கடிதங்கள் - தேவசகாயம்)