அவளுடன் நடந்து பார்..........
அவளுடன் நடந்து பார்..........
உலா வரும் தேரில் ஏறி
நிலா வரும் நேரம்
சிப்பிக்குள் துயில் கொள்ளும் முத்து
தப்பித்து தோரணத்தில் தொங்கி கொள்ளும் நேரம்
வாடைகாற்றுடன் மல்லாக்கு நிற்கும்
மரகீற்றுகளும் மயங்கி வரவேற்கும் நேரம்
குட்டைபாவாடையில் திட்டையை திணரவைக்கும்
என்னவள் விழிக்கும் அந்த நேரம்.
வார்த்தையில் வரும் அவளது வசந்தம்
வருடம் முழுவதும் நம்மை அவள் வசப்படுத்தும்.
மழைச்சாரல் கூட மறைந்து கொள்ளும்
இவளது மழலை சாரலைக் கண்டால்
பஞ்சாமிர்தமும் பயந்தே தலையாட்டும் இந்த
தஞ்சாவூர் பொம்மையின் தலைஅசைவில்.
பட்டுவர்ண துணியில் பஞ்ச வர்ண புறாவின்
பாசமுகம் கோபபட்டவர்களையும் குதுகலப்படுத்தும்.
கோபப்படும் தென்றல் கூட
தனிந்துவிடும் இவளைக் தொட்டால்.
வல்லாரை கீரைக் கூட இவளிடம்
ஞாபக சக்தியை கேக்க வேண்டும்.
திசைமாறும் பறவைகளும்
இசைகரம் விரிக்கும் பூக்களும்
இவளிடம் குடியேற இடம் பெயறும்.
மேலோக அருவி மேகம்
கீலோகம் நோக்கி பயணிக்கும்
இவளுக்காக.
தேனமிர்தமும், பாலமுதமும்
இவள் வாய்பட வாடி நிற்கும்.

பார்ப்பவர்களை
பாசவலைக்குள்
பத்திரபடுத்தும்
அவள் இனிமை....!
எல்லோருக்கும்
பிடிக்கும்
அவள் புதுமை...!
நானும் கடைக்கு
கூட்டிட்டு போகும்
அவள் எளிமை...!
அவளுடன் நடந்து பார்
நடையின் அர்த்தம் புரியும்..!
அவளுடன் சிரித்து பார்
சிரிப்பின் சித்திரம் விளங்கும்..!
அவளுடன் அழுது பார்
அழுகையின் ஆலோலம் தெரியும்..!
என் கவிதைக்குள்
வந்த என்னவள்....!
என்னை கவர்ந்த
என்னவள்......!
எனக்குள்ளும் தன் வீட்டை
கட்டிய என்னவள்...!
எனக்கு பிடித்த
என் பெத்ஸி.
உலா வரும் தேரில் ஏறி
நிலா வரும் நேரம்
சிப்பிக்குள் துயில் கொள்ளும் முத்து
தப்பித்து தோரணத்தில் தொங்கி கொள்ளும் நேரம்
வாடைகாற்றுடன் மல்லாக்கு நிற்கும்
மரகீற்றுகளும் மயங்கி வரவேற்கும் நேரம்
குட்டைபாவாடையில் திட்டையை திணரவைக்கும்
என்னவள் விழிக்கும் அந்த நேரம்.
வார்த்தையில் வரும் அவளது வசந்தம்
வருடம் முழுவதும் நம்மை அவள் வசப்படுத்தும்.
மழைச்சாரல் கூட மறைந்து கொள்ளும்
இவளது மழலை சாரலைக் கண்டால்
பஞ்சாமிர்தமும் பயந்தே தலையாட்டும் இந்த
தஞ்சாவூர் பொம்மையின் தலைஅசைவில்.
பட்டுவர்ண துணியில் பஞ்ச வர்ண புறாவின்
பாசமுகம் கோபபட்டவர்களையும் குதுகலப்படுத்தும்.
கோபப்படும் தென்றல் கூட
தனிந்துவிடும் இவளைக் தொட்டால்.
வல்லாரை கீரைக் கூட இவளிடம்
ஞாபக சக்தியை கேக்க வேண்டும்.
திசைமாறும் பறவைகளும்
இசைகரம் விரிக்கும் பூக்களும்
இவளிடம் குடியேற இடம் பெயறும்.
மேலோக அருவி மேகம்
கீலோகம் நோக்கி பயணிக்கும்
இவளுக்காக.
தேனமிர்தமும், பாலமுதமும்
இவள் வாய்பட வாடி நிற்கும்.

பார்ப்பவர்களை
பாசவலைக்குள்
பத்திரபடுத்தும்
அவள் இனிமை....!
எல்லோருக்கும்
பிடிக்கும்
அவள் புதுமை...!
நானும் கடைக்கு
கூட்டிட்டு போகும்
அவள் எளிமை...!
அவளுடன் நடந்து பார்
நடையின் அர்த்தம் புரியும்..!
அவளுடன் சிரித்து பார்
சிரிப்பின் சித்திரம் விளங்கும்..!
அவளுடன் அழுது பார்
அழுகையின் ஆலோலம் தெரியும்..!
என் கவிதைக்குள்
வந்த என்னவள்....!
என்னை கவர்ந்த
என்னவள்......!
எனக்குள்ளும் தன் வீட்டை
கட்டிய என்னவள்...!
எனக்கு பிடித்த
என் பெத்ஸி.
nice
ReplyDelete