என் நண்பன்!

என் நண்பன்!

என்னை விட பிறரை தாக்குவதில் வலிமையானவன்!

என்னோடு என் அறையில்
காலம் தாழ்த்தாமல் வருபவன்! தங்குபவன்!

கடமையின் மறுபெயரோ அவன் - தெரியவில்லை
இருந்தாலும் என்னிடம் அவன் செய்யவந்த
கடமையை சரியாக செய்துமுடிப்பவன்!

வாழ்க்கையின் வட்டத்தை சுற்றி தளர்ந்து
நான் சோர்வுறும் நிலையில்
விடாமுயற்சியின் எடுத்துக்காட்டாய் திகழ்பவன்!

மனம் சோர்வுற்று கண் அயர்ந்து தூங்கும்போது
அதட்டலான அடியால் என்னை எழுப்பியவன்!

வலிமையான வலியை உடலில் ஏற்படுத்தி
மனதின் வலிமையை சோதிப்பவன்!

நான் பிறறோடு பேசுவது கூட
அவனுக்கு பிடிக்காதோ
என்னவோ உடனே என்னை
தன்பக்கம் இழுத்துக் கொள்பவன்!

என்னோடு ஒன்றாக இருந்து என்
இரத்தத்தோடுக் கலந்தவன்
ஏனென்றால் அவன் வாழ்வதற்காக
என் இரத்தத்தையும் கொடுத்தவன்!

அதட்டலான அடியும்,
வலிமையான வலியும்
கொடுத்தாலும் கூட என்னை
விட்டு நீங்காதிருப்பவன்!

நான் கேட்டால் உயிரையும்
கூட தருபவன்!

பணத்தாலும் கூட அவனை
என்னிடமிருந்து பிரிக்க முடியாது!

அவன் என்னை விட என் உடம்பில்
அதிக சுதந்திரத்தை எடுத்துக் கொள்பவன் !

என் உடல் நலம் அவன் கையில்!
என்னை விட பிறரை தாக்குவதில் வலிமையானவன்!

அவன்தான் என் நண்பன் கொசு!

Comments

Popular posts from this blog

நண்பனின் திருமண நாள் நினைவுடன்....

இரண்டாவது படைப்பு (காற்றாடிமலை கடிதங்கள் - தேவசகாயம்)