Nice CSE ‘A’ Batch 2007– Get together - கால் தடங்களின் நினைவுகளில் - 3

கால் தடங்களின் நினைவுகளில்......
ஓவ்வொருவராக பேச ஆரம்பித்தோம்.வார்த்தைகளை வாடைக்காற்றுடன் பரக்கவிட்டோம். பணியிடங்கள், தங்கும் இடங்கள் பற்றிய அனுபவத்தை அள்ளிவிசினோம். நெடுநாள் சந்திக்காமல் சரிந்துக் கிடந்த நினைவுகள் சில நேரங்களில் சங்கமிக்கத் தொடங்கின. மழைமேகத்தில் தோகைவிரித்து கொண்டாடும் மயில் கூட்டம் போல் எங்களின் காலை பொழுது நிகழ்வுகள் கடந்தன.

முதிய உணவு அடுத்த அறையில். ஆறை கண்காணிப்பாளர்கள் செய்து வைத்திருந்த அந்த அலங்கார உணவு உபசரிப்புக் கூடம் எங்களை அப்படியே மடக்கிப் போட்டது. பார்வையிலே பசியை தீர்த்த பெருமை அந்த அறைக்கு இருந்தது. அற்புத ஒளி வெளிச்சத்தில், அளவான சத்தத்தில், அகலமான அறையில் அனைவரும் மதிய உணவை உண்டோம்.

காலம் கடந்தாலும் இப்படி ஒரு நிகழ்வு கிடைக்குமா? கண்டங்களைத் தாண்டி கடைமைகளை செய்தாலும் இந்த குயில்களின் கூட்டுக்குள் இடம் கிடைக்குமா? ஆயிரம் கணக்கில் அள்ளிப் போட்டாலும் இந்த சந்திப்புக்கு ஈடாகுமா? என்ற சந்தோசம் கண்களுக்குள் இருந்த ஈரத்தை கொஞ்சம் வெளியேக் கொண்டு வந்தன.

கடல்கள் சங்கமித்து அலைகளை எழுப்பி,
அலைகளின் மேலே நின்று நிலவை பிடித்து,
மகுடம் சூட்டுவது போல் அனைவரும் நின்ற காட்சி
வரலாற்றின் வண்ணப்பக்கத்தில் வானவில்லால்
எழுத வேண்டிய வலம்பரி முத்துக்கள்.

சுவை மிகுந்த உணவை வயிறாற உண்ட பின்பு மதிய நிகழ்வு வெகுவாக எங்களை கவர்ந்தது. வார்த்தை இல்லாமல் செய்கையால் எழுதியவற்றை எடுத்துரைத்தது ஒரு மகா யுத்தம்.

கதிரவன் கண் அயர சென்றுக்கொண்டிருந்தான். நிலவும் மெதுவாக பல்லக்கில் ஏறி பயணம் செய்து பார்வையைக் காட்ட தயாராக இருந்தான். அனைவரும் புறப்பட வேண்டிய நேரத்தை உணர்ந்தோம்.நன்றி கூறி, கேக் வெட்டி, நினைவு பரிசுகள் வழங்கி, மகிழ்ந்தோம். வாழ்த்துக்கள் கூறி கலைந்து சென்றோம்.

தேரோடும் வீதியில் தேர் நகர்ந்த பிறகு தெரியும் வெற்றிடமாய் மணதுக்குள் ஒரு வெள்ளை காகிதம் பறப்பதை உணர முடிந்தது. மீண்டும் சந்திக்கலாம் என்றென்னி மூச்சை உள்ளிழுத்து நகர்ந்தோம்! பறந்தோம்! அவரவர் இல்லத்திற்கும் இடத்திற்கும்.

மழைமேகம் சங்கமித்து மழையை மண்ணிற்கு தந்து மக்களின் மனங்களில் மகிழ்வை தருவத போல, சென்னையில் ஒன்று கூடி, பாச வார்த்தைகளை பகிர்ந்து விட்டு மகிழ்வை மறுபிறவி அடையவைத்த அனைத்து என் நெஞ்சத்திற்கு நெருக்கமான நண்பர்களுக்கு நன்றி! சில காரணங்களால் வரமுடியாமல் மனதளவில் எங்களுடனே இருந்த நெஞ்சிற்கினியவர்களுக்கு நன்றி! தொடர்பு கொள்ள முடியாமல் தவறவிட்ட என் பாச நண்பர்களுக்கும் நன்றி!

அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!

மீண்டும் ஒரு சந்திப்புக்காக காத்திருக்கும் நண்பர்களில் நானும் ஒருவன்!

Comments

Popular posts from this blog

நண்பனின் திருமண நாள் நினைவுடன்....

இரண்டாவது படைப்பு (காற்றாடிமலை கடிதங்கள் - தேவசகாயம்)