Nice CSE ‘A’ Batch 2007– Get together - கால் தடங்களின் நினைவுகளில் - 2

கால் தடங்களின் நினைவுகளில்......

சென்னையா? பெங்களூரா? திருவனந்தபுரமா? சந்திப்புக்கான இடம் எது? நாள் எது? எண்ணங்களை காற்றுவாக்கில் பரக்கவிட்டு காத்திருந்தோம்.

ஆதிகமானவர்கள் சென்னையில் இருந்ததாலும், திருவனந்தபுர நண்பர்கள் சென்னைக்கு வர சம்மதித்ததாலும், பெங்களூர் நண்பர்களை சென்னைக்கு அழைப்பது சுலபமாயிற்று. நாட்களை எண்ணினோம். விடுமுறையாகவும், அனைவருக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக 28-03-2009 நாளை தேர்ந்தெடுத்தோம்.

சென்னையில் எங்கே வைத்து நடத்துவது எளிது? என்று தீவிர விசாரித்து சூழ்நிலையையும், நேரத்தையும், உணவையும், இடத்தையும் கருத்தில் கொண்டு இறுதியாக கோயம்பேடு மார்க்கெட்டின் அருகில் உள்ள கோட்டல் ராயல் பிளாசாவை தேர்வு செய்தோம்.



எனது வெகுதூர நண்பர்கள் அன்று அதிகாலையிலே எனது அறைக்கு வந்துவிட்டார்கள். ஆனால் நான் எதிர்பார்த்த எனக்கு உற்சாகமூட்டிய நண்பனை மட்டும் காணவில்லை. ஒரே வரிசையில் அமர்ந்து, ஒன்று போல் ஓரங்கட்டப்பட்டு, எனது கவிதை கல்லூரி மேகஸினில் வருவதற்கு உந்துதலாக இருந்த என் உள்ளுக்குள் உலாவந்த நிலாவை காணவில்லை. பல வகையிலும் என் பண்புக்கு பாத்திரமான என்னவனைக் காணவில்லை. மனம் கனத்தது. காரிருளில் மோதிய பந்தாய் தத்தளித்தது. தடுமாற்றத்தை தடுத்தி நிறுத்திவிட்டு என் நெஞ்சிற்கினியவர்களுடன் நடந்தேன்.

ஹோட்டலை அடைந்து நிகழ்வு மேடையை அலங்கரித்து 'மிக்கிமோஸ்' கேக்குடன் அறையில் அமர்ந்திருந்தோம்.

எதிர்பார்த்த படியே அனைவரும் வந்தார்கள். நினைவலைகளுடன் எங்கள் கடிகார முட்களும் துரத்தி, சந்தித்து, முந்திக் கொண்டிருந்தன.

 தொடரும்....

Comments

Popular posts from this blog

நண்பனின் திருமண நாள் நினைவுடன்....

இரண்டாவது படைப்பு (காற்றாடிமலை கடிதங்கள் - தேவசகாயம்)