இந்த பக்கத்தில் கிறுக்கியவர்கள்.

நெஞ்சிக்கினியவர்களே...!
என் பாதையில் பயணப்பட்டு எனக்குள் பாதிப்பை ஏற்படுத்தியவர்களே இந்த பக்கத்தில் கிறுக்கியவர்கள். நேரடியாகவோ மறைமுகமாகவோ இவர்களிடம் உள்ள ஏதோ ஒன்று என்னை கவர்ந்திருக்கும். உள்ளத்தில் ஊறியதை உருவகப்படுத்திருக்கிறேன். உறுத்தினால் மன்னிக்கவும். உந்தினால் மகிழவும். நீங்களும் கிறுக்கிருக்கலாம். தொடர்ந்து வாசியுங்கள். கருத்தை பதிவு செய்யுங்கள்.

 1. பெஞ்சமின்:


கண்ணை மூடி தூங்க முடியாத மீனைப் போல
உன்னை விட்டு நீங்கி வாழ முடியாது என்னால்.


'கல்லமில்லா ஒரு வெள்ளி நிலா', 'உன் திரு யாழிலென் இறைவா' பாடல்களை கேட்க்கும் போது உன் வாய் அசைவு என் இதைய அசைவு.

நடிப்பு, படிப்பு என பல வகையிலும் சிறந்தவன்.
தனிமைக்கு துணையாக பல நேரங்கள் இருப்பவன்.
தாய் சொல்லை மறுக்காமல் பக்குவமாக கேட்க்கும் பாங்கு இவனை விட யாரிடமும் இருக்க முடியாது.

இவனது நடை கூட யாரையும் காயப்படுத்தாது. வீட்டு அனுமதி இல்லாமல் இவன் கண்கள் எதையும் பார்க்காது. பக்குவமாக பேசி கல்லமில்லாமல் சிரிக்கும் அவன் சிகரம்.

பல நேரங்களில் என்னுடன் இருந்தவன். இருக்கிறவன். இருப்பவன். நான் கூப்பிட்டால் என் கூட எங்கேயும் வருபவன். தொலைவில் இருந்தாலும் அவனது தொலைபேசி என்னை தொலையாமல் பார்த்துக்கொள்ளும். சாதிகளைத் தாண்டி இன்று எங்கள் நட்பு சாதித்திருக்கிறது. தெரியாமல் கூட என்னை அவன் காயப்படுத்தியது கிடையாது.

அன்று மதியம். அவனும் என் சில நண்பர்களும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்கள். நான் தற்செயலாக அவ்வழி வரும் போது அவர்களை பார்த்து கரையில் நின்று பேசிக்கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து கரையில் கிடந்த கல்லை எடுத்து தண்ணீரில் இருந்த இவனை பார்த்து வேடிக்கையாக எறிய ஆரம்பித்தேன். அதுவே போட்டியாக அமைந்து நான் எறியும் போது அவன் மூழ்கி விடுவான். இவ்வாறாக சில கற்கள் தவறிய போது ஓரு கல் அவன் தலையை பதம் பார்த்து விட்டது. சிகப்பு கலரில் தண்ணீர். காது வழியே இரத்தம் தலையிலிருந்து இறங்குகிறது. என் கண்ணில் பயம். அவன் கண்ணில் வலி. வீட்டிற்கு சென்றால் நிச்சயம் அடிதான். தலையை பொத்திக்கிட்டு அவனது வீட்டிற்கு நடந்தோம். உண்மையை மறைத்து அவன் வீட்டில் என்னைக் காட்டி கொடுக்காமல் மருத்துவமனைக்கு சென்றான். நின்ற என் உயிர் மெல்ல எட்டிபார்த்தது. துரத்திலிருந்து என் மனம் அவனைக் கட்டிக் கொண்டது.

இருவருக்கும் பள்ளி நாட்களில் பரிசாகக் கிடைத்த புத்தகத்தை மாற்றிக்கொண்டோம்.

பேருந்து விபத்துக்குள்ளாகி அவனது காலில் படுகாயம். திரவியம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில். வட்டத் துளைவழியாக பார்த்த என்னுடன் புன்முறுவல். 'போதும் டா நீ திரும்பி நடந்திடுவ' என்று என் கண்கள் உனக்கு காட்டிய மொழி என் உள்ள வலி. நீ என்னுடன் இன்னும் நடக்கனும் என்பதற்கான வழி.

சிறுவயதிலே என்னுடன் இணைந்திருந்த அவன் என் மனவானில் மிதந்த என் நீல வர்ண நிலா.
வான் பெற்ற மதி மாலையில்தான் முகம் காட்டும்.
நான் பெற்ற இந்த நைல் நதி
கோடையிலும் வாடை காற்றுடன் சாடை பேசும்.
குளிரிலும் தளிருடன் தாலாட்டு பாடும்.
மேடையிலும் தடையின்றி நடை போடும்.
தொடர்ந்து வரும் இவனது அன்பு
எனக்கு தரும் புது தெம்பு.

Comments

  1. Nostalgia time.. I can pull something from my memory.. when we the "Big Guys" fooling around the village.. I have seen you guys.... I can tell, there wont be any altar boys... like you... Hats off.. and I definitely knew that you will scale new heights!! Now you are in heights, yet thinking of good old days.. Marakamudiyuma thambi antha kaala azhakana ninaivukailai..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனின் திருமண நாள் நினைவுடன்....

இரண்டாவது படைப்பு (காற்றாடிமலை கடிதங்கள் - தேவசகாயம்)