வெறுக்கிறேன் - உனக்காக !



வெறுக்கிறேன் - உனக்காக !


அம்மா !

நீ பொட்டு வைக்க முடியாது என்பதால்
   உன் மொட்டு போன்ற நெற்றிக்காக – அந்த
  பொட்டையும் கூட வெறுக்கிறேன் - உனக்காக !




அம்மா !
                நீ பூச்சூட முடியாது என்பதால்
               உன் பூ போன்ற முகத்திற்காக – அந்த
               பூவையும் கூட வெறுக்கிறேன் - உனக்காக !

அம்மா !
                 நீ பட்டாடைகள் உடுத்த முடியாது என்பதால்
                உன் கனிந்த உள்ளத்திற்காக – அந்த
                பட்டாடைகளையும் கூட வெறுக்கிறேன் - உனக்காக !
அம்மா !
                கெட்ட சகுணமாக உன்னை
                பார்க்க ஆரம்பித்ததற்காக
               இந்த உலகத்தையும் கூட
               வெறுக்கிறேன் - உனக்காக !
                 
                              எல்லாம்
                  தாயே - உனக்காக !

Comments

Popular posts from this blog

நண்பனின் திருமண நாள் நினைவுடன்....

இரண்டாவது படைப்பு (காற்றாடிமலை கடிதங்கள் - தேவசகாயம்)