வருடத்தின் வசந்த விழா.....

என் அன்பு நெஞ்சங்களே...!
வருகின்ற வருடத்திற்கு வரவேற்பு வழங்கி உங்களுக்கு வாழ்த்துக்கள் கூறுகிறேன்.
இனிய புத்தாண்டு புது வாழ்த்துக்கள்..!
சென்ற நாட்களெல்லாம் செழிப்பாய் சிறந்தது போல்வருகின்ற நாட்களும் வளமையாய் வளர வாழ்த்துக்கள்.

        வெள்ளங்களின் வெண்மையாய் - இன்பம்
       இல்லங்களில் இணைந்திருக்கட்டும்.
       மல்லிகையின் மணமாய் - மகிழ்ச்சி
       மன வானில் மணம் பரப்பட்டும்.

சிரிப்பொலிகள் எங்கும் சிலம்பொலிகள் போல் சிதறட்டும்.
நீர்வீழ்ச்சியில் துள்ளித்தெரிக்கும் நீர்த் துளிகள் போல்
பாசம் பகிர்வினில் பகைமையை உடைத்தெரிக்கட்டும். 
புன்முறுவலில் இன்னுயிர்கள் இணையட்டும்.

       அன்புறவில் ஆயுள் கூடட்டும்.
       தேடல்கள் நிறைவேறட்டும், ஊடல்கள் உருமாறட்டும்.
       உதிர்ந்த மனங்கள் துளிர்க்கட்டும், ஏக்கங்கள் இடம் மாறட்டும்.
                                
                                 வருடத்தின் வசந்த விழா.....
                                 விழி எங்கும் நடக்கட்டும்

Comments

Popular posts from this blog

இரண்டாவது படைப்பு (காற்றாடிமலை கடிதங்கள் - தேவசகாயம்)

கிறிஸ்த்து பிறப்பு நல்வாழ்த்துக்கள்

நண்பனின் திருமண நாள் நினைவுடன்....