புலரும் புத்தாண்டு..... 2012

புலரும் புத்தாண்டு..... தெருவோர சோடியம் விளக்கருகில் சோடிக் கிளிகளின் கண்ணில் மின்னித் தெரிக்கும் வான வேடிக்கையாய் தூரலில் நனைந்து தலையாட்டி தாலாட்டும் பச்சை இலையின் நரம்பில் நகரும் நதியோட்டமாய் ஒரே கூட்டுக்குள் சீருடை அணிந்து சிரிக்கும் எறும்புடன் ஒட்டிக்கொள்ளும் சிறு துளி இனிப்பாய் இருக்கட்டும். அன்பு அவனியை ஆளட்டும். நினைத்த எண்ணங்கள் நிறைவேறட்டும். இறையருள் நம்மை வளப்படுத்தட்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள்....