இந்த பக்கத்தில் கிறுக்கியவர்கள்.

நெஞ்சிக்கினியவர்களே...! என் பாதையில் பயணப்பட்டு எனக்குள் பாதிப்பை ஏற்படுத்தியவர்களே இந்த பக்கத்தில் கிறுக்கியவர்கள் . நேரடியாகவோ மறைமுகமாகவோ இவர்களிடம் உள்ள ஏதோ ஒன்று என்னை கவர்ந்திருக்கும். உள்ளத்தில் ஊறியதை உருவகப்படுத்திருக்கிறேன். உறுத்தினால் மன்னிக்கவும். உந்தினால் மகிழவும். நீங்களும் கிறுக்கிருக்கலாம். தொடர்ந்து வாசியுங்கள். கருத்தை பதிவு செய்யுங்கள் . 1. பெஞ்சமின்: கண்ணை மூடி தூங்க முடியாத மீனைப் போல உன்னை விட்டு நீங்கி வாழ முடியாது என்னால். ' கல்லமில்லா ஒரு வெள்ளி நிலா', 'உன் திரு யாழிலென் இறைவா' பாடல்களை கேட்க்கும் போது உன் வாய் அசைவு என் இதைய அசைவு. நடிப்பு, படிப்பு என பல வகையிலும் சிறந்தவன். தனிமைக்கு துணையாக பல நேரங்கள் இருப்பவன். தாய் சொல்லை மறுக்காமல் பக்குவமாக கேட்க்கும் பாங்கு இவனை விட யாரிடமும் இருக்க முடியாது. இவனது நடை கூட யாரையும் காயப்படுத்தாது. வீட்டு அனுமதி இல்லாமல் இவன் கண்கள் எதையும் பார்க்காது. பக்குவமாக பேசி கல்லமில்லாமல் சிரிக்கும் அவன் சிகரம். பல நேரங்களில் என்னுடன் இருந்தவன். இருக்கிறவன். இருப்பவன். நான் கூப்பிட்டால் என் கூட எங்...