வெறுக்கிறேன் - உனக்காக !

வெறுக்கிறேன் - உனக்காக ! அம்மா ! நீ பொட்டு வைக்க முடியாது என்பதால் உன் மொட்டு போன்ற நெற்றிக்காக – அந்த பொட்டையும் கூட வெறுக்கிறேன் - உனக்காக ! அம்மா ! நீ பூச்சூட முடியாது என்பதால் உன் பூ போன்ற முகத்திற்காக – அந்த பூவையும் கூட வெறுக்கிறேன் - உனக்காக ! அம்மா ! நீ பட்டாடைகள் உடுத்த முடியாது என்பதால் உன் கனிந்த உள்ளத்திற்காக – அந்த பட்டாடைகளையும் கூட வெறுக்கிறேன் - உனக்காக ! அம்மா ! ...