சித்திரையில் வரைந்த சித்திரமே...பார்த்த கண்களுக்கு விசித்திரமே...
சித்திரையில் வரைந்த சித்திரமே...பார்த்த கண்களுக்கு விசித்திரமே...
மல்லிகையை...மணம் மாறா மனம் கொண்ட சதிபதியே...

நாலடியில் நடையெடுத்து
முத்தமிழால் முத்தமிட்டு
இருகரம் பிடிக்கும் இருவருக்கு
ஓரு மனதார வாழ்த்துக்கள்
திருமண வாழ்த்துக்கள்.
வரிசையாய் வாகனம்
நீண்ட பயணம்
ஆச்சரியமான ஆலயம்
அழகான திருமணம்.
இனிப்பான உணவு
புதுமையான அனுபவம்
பதியதொரு அத்தியாயம்
அத்தியாத்தில் ஓர் அதிசயம்.
வாடாத பூக்கள் இரண்டு வானவில்லின் வர்ணத்தில் வலம் வந்தது.
மூடாத சிப்பி ஒன்று அழகான முத்து ஒன்றை அசைந்தாடி சுமந்து வந்தது.
பூங்காற்று புல்லாங்குழலுடன் கைகோர்த்து பது நடைபோட்டதைக் கண்டு ஒரே இடத்தில் நின்று பறக்கும் தட்டாம் பூச்சியாய் மனம் மயங்கி நின்றது.
குறையாத கல்வி
நிறைவான அறிவு
நீண்ட ஆயுள்
வற்றாத ஆற்றல்
வளமையான இளமை
தொலையாத துணிவு
முழுமையான பெருமை
அதிகமான பொன்
அளவான பொருள்
அதிராத புகழ்
திரளான நிலம்
பெயர் சொல்லும் நன்மக்கள்
கல்லமில்லா நம்பிக்கை
நொடிபொழுதிலும் நோயின்மை
அடங்காத முயற்சி
அணையாத வெற்றி
என தமிழ் கூறும் பதினாறு பெற்று வாழ
சித்திரை பதினாறில்
வெட்டு வெண்ணி வித்யாவுடன் கைகோர்த்த
திட்டை பெஞ்சமினுக்கு வாழ்த்துக்கள்.!
i have seen ur marrage photo vidhya. nice
ReplyDelete