இதய நாயகியே!..

காலை பொழுதில் உன் நினைவுகளுடன் விழிக்கும் என் கண்கள் இரவு வரை உனக்காகத் துடிக்கிறது உன்னை காண முடியாத ஏக்கத்தில் அதுவும் மூடிக்கொள்கிறது. இதற்காக நான்..... என் கண்களை உன் உயிரின் கூடாரமாக வைத்துவிட்டேன் என் கருவிழியில் புதிய இருப்பிடத்தையும் ஏற்படுத்திவிட்டேன் நமக்காக நான் கதையையும் எழுதி அதற்கான வசனத்தையும் குறித்துக் கொண்டேன்..... புதிய மேடையில் உன் அரங்கேற்றத்திற்காக காத்திருக்கிறது என் இதயம்! ...