பிரிவின் வலி


பிரிவின் வலி அது புரிந்தது எனக்கு


பார்க்கும் தொலைக்காட்சி சேனல்கள் கூட
உன்னுடன் நான் தொலைந்த காட்சிகளை நினைவூட்டுகிறது.
முதல் முதலாய் நாள் முழுவதும் மனம் வலித்த
தினமாக இன்று என்னால் உணர முடிந்தது – உன்னால்.


அசைவு கூட இல்லாமல் இசைந்து பேச கூட முடியாமல்
தவித்து வலிக்கிறது – மனம்
உன் முகத்தரிசனம் இனி கிடைக்காது
என்று புரிந்து கொண்ட பிறகும்
உன் முகம் பார்க்க நினைத்து – பின்
அதுவும்
இல்லையென்று தெரிந்த பிறகு
என்னடா செய்வது?....
புரியவில்லை எனக்கு....
கண் மூடி இறைவனிடமமும்
வேண்டி பார்க்கிறேன்
SMS - ஆவது  வரட்டும் என்று...
காத்திருக்கிறேன்...காலை முதல்
இக்கவிதை பிறக்கும் இரவு வரை..
வரவில்லையே.....


உன் வயது அளவுக்கு கூட
காசுப்பற்றி கவலையில்லாமல்
நானும் அனுப்பிபார்த்துவிட்டேன்.


தெரியவில்லை எனக்கு..ஏன்
முடியவில்லை எனக்கு.....புரியவும் இல்லை.


வலி கூட சில நேரங்களில் மறைந்துவிடும்
என்று நினைத்துக் கொண்டே
மற்ற விசயங்களில் கவனம் செலுத்த
முற்படும் போது தோல்விதான்;;;....
தோல்விதான் பிடிக்கும் என்றாலும் கூட
தாங்க முடியவில்லை என்னால்.....


வலி நிரந்தரம் ஆகிவிடுமோ? என்று
நினைத்துக் கொண்டே மறக்கப்பார்க்கிறேன் உன்னை....
தோல்வி தான்...................


கண் மூடி பழகிய நாட்களின்
நினைவுகளில் கூட
என்னால் நீந்த முடியவில்லை
என்ன செய்வது?
எங்கேயும் நீதானே தெரிகிறாய்.


நினைத்து கூட பார்க்க முடியவில்லை
என்னால் - உன்னை மறக்க முடியும் என்று....


உனக்காக பல மாற்றங்கள் - என்னில்
எனக்கே புதுமையாகத் தெரிகிறது.
ஏன்? எதற்காக? யோசிக்கக்கூட
முடியவில்லை..................................
உன்னை மறந்து விடுவேனோ என்று......
அதனால்தான் தாங்கி கொள்கிறேன்
உன்னை மறக்க முடியாத வலியை......

Comments

Popular posts from this blog

நண்பனின் திருமண நாள் நினைவுடன்....

இரண்டாவது படைப்பு (காற்றாடிமலை கடிதங்கள் - தேவசகாயம்)