எங்கள் தெரு... வீரவிளைக்காலனி... கன்னியாக்குமரி மாவட்டத்தில், நாக ர்கோவில் நகரத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில், தோவாளை வட்டாரத்தில், பூதப்பாண்டி பஞ்சாயத்திற்குட்பட்ட திட்டுவிளை கிராமத்தில் உள்ள ஒரு தெரு. மூன்று மதங்களால் சூழப்பட்டு, நல் மனத்தவர்களால் ஆளப்பட்டு, தென்னை மரங்களைத் திண்னையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட நைல் நதி. நீண்டு செல்லும் இந்த நைல் நதியின் இருபக்கம் வீடுகளாலும் நடுபக்கம் சிமெண்ட் சாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட பகுதி. கழிவு நீர்க்கால்வாய்களும் இந்த நதியில் கலப்பதுண்டு. திட்டுவிளை கிராமத்திற்கு இத்தெரு பிரசிதிபெற்றது. சிறார்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என எல்லோரும் எப்பொழுதுமே சுறுசுறுப்பாகக் காணப்படும் இடம். ஆற்று நீர் ஆவேசப் பட்டால் கொஞ்சம் ஆத்திரம் தனிய இந்த நதிக்குள் நடனமாடும். பாண்டி விளையாட்டு, நொண்டி விளையாட்டு, கள்ளன் போலீஸ் விளையாட்டு, பல்லாங்குழி, கோலி குண்டு(களச்சி), குச்சியாம் பிள்ளை, ஆடு புலி, கபடி, வாலிபால் என அறியா வயதில் மண் தரையில் உழன்று மல்லுக்கட்டின நாட்கள் தான் எத்தனை. 'பூப்பறிக்க வருகிறோம் வருகி...